Home இரகசியகேள்வி-பதில் பெண்ணின்கீ ழ் இடுப்புப் பகுதி பரிசோதனை

பெண்ணின்கீ ழ் இடுப்புப் பகுதி பரிசோதனை

70

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை என்றால் என்ன?

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளின் உள் மற்றும் வெளிப்புறத்தை, மருத்துவரோ அல்லது செவிலியரோ ஆய்வு செய்யும் செயல்முறையே கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை எனப்படும்.
இந்த சோதனையின்போது மருத்துவர் அல்லது செவிலியர் கருவாய், யோனி, கருப்பை வாய், கருப்பை மற்றும் சினைப்பைகள் நன்றாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள அவற்றை ஆய்வு செய்வர். மேலும் இந்த உறுப்புகளில் நோய்த்தொற்று, புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்வர். நிறைய பெண்கள் வருடாந்திர இடுப்புப் பகுதி சோதனைக்குச் செல்வர். இந்த சோதனை 3-5 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது?

பின்வரும் காரணங்களுக்காக கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை செய்யப்படலாம்
பெண்ணோயியல் மதிப்பீடு: பால்வினை நோய்கள், கருப்பை நார்த்திசுக் கட்டிகள், கருப்பை கட்டிகள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்காக கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை செய்யப்படுகிறது.
பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு, இடுப்பு வலி, சிறுநீர் பாதையில் பிரச்சனைகள், பிறப்புறுப்பில் தேவையற்ற திரவம் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் நோய்த்தொற்றுகளை கண்டறிதல் ஆகியவற்றிற்கு கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

கருப்பை, சினைப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் வழக்கமான அளவில் உள்ளதா என்பதையும், அவை தங்களின் இயல்பு நிலையில் இருக்கிறதா என்பதையும் மதிப்பிட கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை உதவுகிறது.
புற்றுநோய்க்கு முந்தைய நிலை போன்ற கருப்பை வாயில் கண்டறியப்படும் பிரச்சனைளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனையில் என்ன நடக்கும்?

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை தொடங்குவதற்கு முன் உங்கள் மாதவிடாய் விவரங்கள், பாலியல் செயல்பாடுகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பற்றி மருத்துவர் விசாரிப்பார்.நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனைகளையும் நீங்கள் கூறலாம்.
மருத்துவரின் பரிசோதனை அறையில் உங்கள் உடையை மாற்றி கவுன் அணிந்துகொள்ளும்படி கூறப்படலாம். மேலும் உங்கள் கூடுதல் வசதிக்காக ஒரு ஷீட் வழங்கப்படலாம்.

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனைக்கு கால் மூட்டுகளை லேசாக மடக்கி, பாதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று சற்று தூரமாக இருக்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேஜையின் மீது பாதங்களை வைத்து மல்லாந்து படுக்கவேண்டும். நிதானமாக சுவாசித்து, கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனைக்கான அனைத்து தசைகளும் தளர்வாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனையில் பின்வருபவை அடங்கும்:

எக்ஸ்டெர்னல் விஷுவல் எக்ஸாமினேஷன்: பிறப்புறுப்பின் இதழ் பகுதியில் சிவத்தல், புண்கள், வீக்கம் அல்லது அசாதாரண அறிகுறிகள் இருக்கிறதா என்பதை மதிப்பிட காட்சி ஆய்வு நடத்தப்படும்.
இன்டர்னல் விஷுவல் எக்ஸாமினேஷன்: பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய்ப் பகுதியை ஆய்வு செய்வதற்காக மருத்துவர் ஸ்பெக்யூலம் எனும் உபகரணத்தைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை விரியச் செய்வார்.பரிசோதனையின் இந்தப் பகுதி சில பெண்களுக்கு கூச்சமாக இருக்கலாம். வலி ஏதேனும் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பாப் ஸ்மியர் தேவைப்பட்டால், உங்கள் மருத்துவர் ஒரு சில கருப்பை வாய் செல்களை சேகரிக்கலாம்.
இருகைகளால் செய்யப்படும் பரிசோதனை: கருப்பை, கருமுட்டை குழாய்கள் மற்றும் சினைப்பையின் வடிவம், அளவு மற்றும் நிலையை ஆய்வு செய்வதற்காக உங்கள் மருத்துவர் இருகைகளால் செய்யப்படும் பரிசோதனையைச் செய்யலாம்.இந்த பரிசோதனையில் கையுறை அணியப்பட்ட வழவழப்பான விரல், குறிப்பாக இடது கைவிரல், கருப்பை வாயை உணர்வதற்கும் அதை சரி செய்வதற்கும் பெண்ணுறுப்பில் செருகப்படும்.வலது கையானது கருப்பையை உணர்வதற்காக கீழ் இடுப்புப் பகுதிக்கு சற்று மேலே அடிவயிற்றில் வைக்கப்படுகிறது.பின்னர் கருமுட்டை குழாய்கள் மற்றும் சினைப்பையை உணர்வதற்காக வலது கை நகர்த்தப்படுகிறது. எந்த வலியும் இருக்காது, ஆனால் அழுத்தமான உணர்வு இருக்கலாம்.
மலக்குடலில் வலியுணர்வு, அசாதரணமானவை அல்லது வளர்ச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை மதிப்பிட மலக்குடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையும் கையுறை அணியப்பட்ட விரலைப் பயன்படுத்தி மருத்துவர் மூலமாகவே செய்யப்படுகிறது.

கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை முடிந்ததும் நீங்கள் உங்கள் உடையை அணிந்துகொள்ளலாம். பரிசோதனையின் முடிவுகள், கண்டறியப்பட்ட பிரச்சனைகள், அதற்கான அடுத்தகட்ட சோதனைகள், சிகிச்சை மற்றும் மேற்கொண்டு செய்யவேண்டியவைப் பற்றி மருத்துவர் உங்களிடம் விவாதிப்பார்.