Home அந்தரங்கம் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம்? – தெரின்சுக்ங்க

பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம்? – தெரின்சுக்ங்க

360

மனதும், உடலும் ஒன்றாக கலந்து இணையும் நிகழ்வில் ஒரு வித தெய்வீக அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள். உடல்களின் சங்கமத்தில் மட்டுமே இது ஏற்படுவதில்லை மனமும் ஒன்றிய செயல்பாடுகளில்தான் அந்த அற்புத சுக அனுபவம் கிடைக்கும். இதனால் உடல்ரீதியான வலிகள் மட்டுமின்றி மனரீதியான அழுத்தமும், சோர்வும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். இதனாலேயே பெண்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

மனிதர்களின் பாலியல் எண்ணங்களும், உணர்வுகளும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகரிக்கும். அந்த பருவத்தில் அவர்களுக்கு சரியான வடிகால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே திருமணம் என்ற சடங்கினை ஏற்படுத்தி வைத்துள்ளனர் முன்னோர்கள். இதனால் பாலியல் உணர்வுகளுக்கு தீனி போட்டது போலவும் ஆயிற்று தங்களின் சந்ததியை பெருக்கியது போலவும் ஆயிற்று. இந்த உலக நியதிக்கு ஏற்பவே அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆண் பெண் இணைவு என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே என்ற நிலை மாறிவிட்டது.

இன்றைக்கு அது உடல்ரீதியான, மனரீதியான நோய்களைப் போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. எனவேதான் செக்ஸ் மீதான ஈடுபாடும், ஆர்வமும் பெண்களுக்கு அதிகரிக்கிறது. மனித உடலில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒருமுறையும் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் ஹார்மோன் சுரக்கின்றதாம். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் நினைவுகளும், உணர்வுகளும் உயிர்ப்போடு இருக்கின்றதாம். பெண்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன இவற்றை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

ஆனந்த அனுபவம்

தனது துணையுடன் இணையும் போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் வர்ணிக்க இயலாது என்கின்றனர் சில பெண்கள். சிலருக்கு அருவியில் குளிப்பது போலவும், சிலருக்கு மின்சாரத்தை தீண்டியது போலவும் இருக்குமாம். உச்சக்கட்ட உணர்வுகள் சிலருக்கு உற்சாகமாக இருக்குமாம். இதுபோன்ற ஆனந்த அனுபவத்திற்காகவே செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

மனஅழுத்தம் குறைகிறது

மனதில் உள்ள பாராத்தை குறைப்பதில் செக்ஸ்க்கு நிகரான மருந்து எதுவும் இல்லை. துணையுடன் காதலாய் இணையும் போது சுரக்கும் ஹார்மோன் உடலுக்கு நன்மை தருகிறது. கவலையை மறந்து ஆரோக்கியமான உறக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதனால் அதிக அளவிலான பெண்கள் உறவில் ஈடுபட ஆர்வம் கொள்கின்றனர்.

அழகாய் உணர்கிறோம்

உடலுறவு சிறந்த உடற்பயிற்சி என்பது அனைவரும் அறிந்ததே. தம்பதியர் இருவரும் மனம் ஒன்றி ஈடுபடும்போது உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் உடல் இளைத்து அழகாகிறது. இதற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபட பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ரொமான்ஸ் உணர்வுகள்

கலவியானது மனதையும், உடலையும் இளமையாக்குகிறது. ரொமான்ஸ் உணர்வுகளை ஊக்குவிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இதன்காரணமாகவே அதிக அளவிலான பெண்கள் துணையுடனான உறவினை விரும்புகின்றனராம்.

இதுபோன்ற ஆரோக்கியமான காரணங்களினாலே பெண்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.