தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரங்களுக்குள் அவசர கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை “முடிந்த பிறகு காலையில் பயன்படுத்தும் மாத்திரைகள்” எனவும் அறியப்படுகின்றன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இவை அதிகளவில் பலனளிக்கும். ஏற்கனவே கர்ப்பம் உருவாகி இருந்தால், இது வேலை செய்யாமல் இருப்பதுடன், கருவிற்கு தீங்கு விளைவித்துவிடும் இவற்றை “கருக்கலைப்பு மாத்திரைகள்” எனக் கருதக்கூடாது.
அவசர கருத்தடையை பின்வரும் சில சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம்:
பாதுகாப்பற்ற உடலுறவு
ஆணுறை பலனளிக்கவில்லை எனில்
தவறிய பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்
கட்டாய பாலியல் தொடர்பு
”உடலுறவிற்கு பிறகு தேவையற்ற கர்ப்பம் பற்றி ஒருவர் கவலைப்பட்டால் அவர் ஒரு மருத்துவரை அணுக எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. அவசர கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதில் ஏதேனும் மருத்துவ முரண்பாடு இருந்தால் அதனை சரிசெய்வதற்கு சிறந்த நபர் உங்களது மருத்துவரே. நீங்கள் அவசர கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்ட பின்பு, ஒரு வார காலத்திற்குள் உங்களது யோனியில் இரத்தப்போக்கினை அனுபவிக்க நேரிடலாம். மாதவிடாய் தவறிவிட்டால் மருத்துவ பரிசோதனை செய்வதுடன், கர்ப்ப பரிசோதனையும் செய்ய வேண்டும். ஏனெனில் அவசர கருத்தடை மாத்திரைகள் 100% பலனளிப்பவை அல்ல”, என டாக்டர் பீனா ஜெய்சிங் எச்சரிக்கிறார்.
கருத்தடை செய்வதற்கான இறுதி முயற்சியாக மட்டுமே இந்த மாத்திரைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவற்றை கருத்தடைக்கு தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. தேவையற்ற கர்ப்பத்துக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வழக்கமான கருத்தடை தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவசர கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள்: குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல் இந்த மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் சாதாரண பக்க விளைவுகளாகும். சில பெண்கள் தலைவலி மற்றும் மார்பகத்தில் இரணத்தை அனுபவிக்கக் கூடும்.