பொதுவாக ஆண்களோ அல்லது பெண்களோ ஆகிய இரு பாலினத்தவர்களிடமும் பருவம் அடைதல் என்ற இயற்கையான நிகழ்வுகள் ஏற்படுகிறது.
பெண்கள் மற்றும் ஆண்கள் பருவ வயதினை அடைவதற்கு முன்பு அவர்களின் உடம்பில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
பெண்களிடம் முகப்பரு, உடலில் முடி வளர்தல், மார்பக வளர்ச்சி, திடீர் மனமாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதுவே ஆண்களிடம் தாடியின் வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகள் பெரிதாகுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
பெண் மற்றும் ஆண் அவர்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கத்திற்கு தயாராகும் நிலையை தான் பூப்பெய்துதல் (Puberty) எனப்படுகிறது.
முந்தைய தலைமுறைகளில், பருவம் அடையும் பெண்களின் வயது 14-15 ஆக இருந்தது. ஆனல் தற்போது உள்ள வாழ்க்கைமுறை மாற்றத்தினால் சிலர் 10-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள்.
பருவம் அடைவதற்கு முன் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
பெண்கள் பூப்பெய்துவதற்கு முன் உடலில் பல மாற்றங்களை அவர்களால் உணர முடியும். ஏனெனில் இந்த மாற்றங்கள் நிகழ்த்துவது அவர்களின் உடம்பில் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன்கள் ஆகும்.
பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால், அவர்களின் உயரம் , மார்பகம் போன்றவற்றின் வளர்ச்சி அதிகரிக்கும்.
மார்பகத்தின் முலைக்காம்புகள் பெரிதாகி, அதைச் சுற்றிய இடம் கருப்பாக மாறுவதுடன், அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்புப் பகுதியில் முடிவளரத் தொடங்கும்.
பெண்கள் உடலின் உட்பகுதியான கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகள் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். பின் கர்ப்பப்பையில் மாதத்துக்கு ஒரு முட்டை மட்டும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும்.
பின் பருவம் அடையும் போது கடுமையான வயிற்று வலியுடன் கூடிய உதிரப் போக்குகள் வெளிப்படு. இந்த நிகழ்வானது மாதம் ஒரு முறை மட்டுமே ஏற்படும்.
பெண்களின் மனதில், எண்ணங்களில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் இந்த மாற்றங்கள் நான் பெரியவளாகி விட்டேன் என்ற சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது.