என் கணவர் என் முறை மாப்பிள்ளை. அவர் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளை அவருடைய தாயார் வளர்த்து வருகிறார். அவருக்கு 40 வயது. எனக்கு 28. நான் விரும்பித்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன். நல்ல முறையில்தான் வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால் என்னுடன் உறவு வைத்துக்கொள்ளும் நேரத்தில் முதல் மனைவியுடன் எப்படி எல்லாம் உறவு வைத்துக்கொண்டார் என்பதை விளக்குவார். இதனால் எனக்கு கடுமையான ஆத்திரம் வருகிறது. இதனால் எங்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. எனக்கு செக்ஸ் ஆர்வமும் குறைந்துவிட்டது. `நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற ஆசையை என் கணவரிடம் தெரிவித்தேன். உடனே அவர், `உனக்கு தேவை என்றால் பெற்றுக்கொள்’ என்றார். அவருக்கு விருப்பம் இல்லாதது போல் பேசியதால் நான் இரு முறை கருக்கலைப்பு செய்துவிட்டேன். கருக்கலைப்பு செய்து கொண்டதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அடக்க முடியாத அளவிற்கு ஆத்திரம் வருகிறது. இதனால் நான் தினமும் என் கணவரிடம் சண்டைபோட்டபடி நிம்மதியில்லாமல் வாழ்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக நான் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் உறவு வைத் துக்கொண்ட பின்பும் கரு தங்கவில்லை. நான் இருமுறை கருக்கலைப்பு செய்து கொண்டதால்தான் கரு தங்கவில்லையா? மாதத்தில் எத்தனை தடவை உறவு வைத்துக் கொண்டால் எளிதாக நான் கருத்தரிப்பேன் என்பதைக் கூறுங்கள். நான் நிம்மதியாக வாழ ஆலோசனை சொல்லுங்கள்?
(மதுரை வாசகி….)
கிரேக்க புராண கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். புரோமித்தியாஸ் என்ற அரக் கன் தனது வீட்டின் அருகில் செல்பவர்களை எல்லாம் நன்றாக உபசரித்து, தனது வீட் டில் நள்ளிரவில் நடக்கும் விருந்துக்கு அழைப்பான். மக்களும் செல்வார்கள். நன்றாக விருந்து கொடுத்துவிட்டு, தன் வீட்டில் உள்ள ஸ்பெஷல் கட்டில் ஒன்றில் படுக்க வைப்பான். படுப்பவரின் கால்கள் கட்டிலைவிட நீளமாக இருந்தால் வெட்டிவிடுவான். கட்டிலைவிட கால்கள் கட்டையாக இருந்தால் கால்களை இழுத்து முறித்துவிடுவான். அதனால் அவனுடைய வீட்டு விருந்துக்கு செல்பவர்கள் அனைவரும் முடமாகினார்கள். உயிரிழந்தவர்களும் உண்டு.
புரோமித்தியாஸ் வைத்திருந்த கட்டில்போல் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும் தங்கள் கணவரைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் விரும்புவதுபோல் கட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் பல்வேறு செயல்கள் மூலம் நெருக்கடி கொடுத்து கணவரை அந்த கட்டத்திற்குள் முடக்க நினைக்கிறார்கள். நீங்களும் அத் தகைய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றே தெரிகிறது. நீங்கள் உங் கள் கணவரிடம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள். தவறில்லை. ஆனால் அந்த மாற்றங்களை மிரட்டல், திணித்தல், ஒத்துழைக்காமல் இருத்தல், தவிர்த்தல் போன்ற வைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்று நீங்கள் நினைப்பதுதான் தவறு.
அவர் ஏற்கனவே திருமணமானவர், விவாகரத்து பெற்றவர் என்பதைத் தெரிந்துதான் நீங்கள் அவரை திருமணம் செய்திருக்கிறீர்கள். அவருக்கு நீங்கள் இரண்டாவது மனைவி என்பதால் நீங்கள் அவருக்கு கொடுக்கும் அன்பு, பாசம், உறவு போன்ற அனைத்தையும் அவர் முதல் மனைவி தந்ததோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கிறார். அவர் விரும்பிய அளவிற்கு நீங்கள் உறவில் திருப்திப்படுத்தாத நிலை ஏற்படும்போது அவர், ‘என் முதல் மனைவி இதைவிட சிறப்பாக நடந்து கொண்டாள்….!’ என்பது போல் அவர் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அதனால் நீங்கள் அவரிடம் அதிக அன்பை எதிர் பார்த்தால், முதலில் நீங்கள் அன்பை அதிகம் கொடுங்கள். எங்கெல்லாம், எப்படி எல் லாம் சாத்தியமோ அப்படி எல்லாம் அவர் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவையுங்கள். அதன் மூலம் அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்படும்.
முதலில் நீங்கள் குழந்தை வேண்டாம் என்று நினைத்து இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருக்கிறீர்கள். இப்போது குழந்தை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். தாய்மை யடைவது விலை கொடுத்து வாங்குவதல்ல. கணவர், உனக்கு தேவைப்பட்டால் குழந்தை பெற்றுக்கொள் என்கிறார். அதற்கு மேல் அவரிடம் ஏன் உறுதி மொழி பெற விரும்புகிறீர்கள். அவருடைய அனுமதியே போதுமானது. நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தோஷமான சூழ்நிலையை முதலில் வீட்டில் உருவாக்குங்கள். இருவரும் மனம்விட்டுப்பேசி சந்தோஷமான மனநிலைக்கு வாருங்கள்.
இருவரும் மனமுவந்து உறவில் ஈடுபடுவதே விரைவாக தாய்மையடைய சிறந்த வழி. எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் உறவு கொள்ளும்போது தாய்மையடையும் வாய்ப்பு 83 சதவீதமாக இருக்கும். 3 முறை உறவு வைக்கும் போது 51 சதவீதமாகவும், 2 முறை என்றால் 46 சதவீதமாகவும், ஒரு முறை என்றால் 32 சதவீதமாகவும் இருக்கும். வாரத்தில் ஒரு முறைக்கும் குறைவாக உறவு வைத்துக்கொண்டால் தாய்மையடையும் வாய்ப்பு 17 சதவீதத்திற்கும் கீழாக சென்றுவிடும்.
-டாக்டர்
நான் 30 வயதான இளந்தொழிலதிபர். என் பெற்றோர் சேர்த்து வைத்திருக்கும் பணத் தில் ஒரு பகுதியை புதிய புதிய தொழில்களில் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். நான் தொடங்கியிருக்கும் தொழில்களில் பெரும்பாலானவை பெண்களின் தயாரிப்பு பொருட்கள் தொடர்புடையவை. திருமணமாகி ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்கள் என்னுடன் தொழில் பங்குதாரர் ஆகியிருக்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்ட பெண்கள் என் சகஜமான அணுகுமுறையை தப்பாக நினைத்துக்கொண்டு என்னிடம் `தவறான’ உறவை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக திருமணமாகி- குழந் தைகள் பெற்றெடுத்த ஒரு பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு என்னோடு வந்துவிடுகிறேன் என்று விடாப்பிடியாக செல்கிறாள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இப்போது பெண்களிடம் தொழில்ரீதியாக பேசுவ தற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் தொழில் பார்ட்னர்களாக இருக்கும் அத் தகைய பெண்களிடம் நான் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவறான ஆசை கொள்ளும் பெண்களிடமிருந்து நான் தப்பிக்கவும், என் தொழிலை ஒழுங்காக நடத் தவும் ஆலோசனை கூறுங்கள்?
(பெங்களூர் வாசகர்…)
ஒரு சில பெண்களால் உங்களுக்கு ஏற்படும் `நெருக்கடியை’ பூதாகரமாக நினைத்துக் கொண்டு, `பெண்கள் என்றாலே இப்படித்தான்’ என்று கருதி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் தவறே செய்யாத போது தப்பிக்கவேண்டும் என்ற கட்டா யமும் இல்லை. பெண்களிடம் இயல்பாக பழகுங்கள். எல்லா இடத்திலும் ஒரு சிலர் அப்படியும் இப்படியுமாக இருக்கத்தான் செய்வார்கள்.
திருமணமான பெண்களில் சிலர் உங்களைத் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும்போது, `அவர்கள் தவறாக புரிந்துகொள்ளும் அளவிற்கு உங்கள் நடத்தை இருக்கிறதா?’ என்ற கண்ணோட்டத்தில் உங்களை நீங்களே ஆத்ம பரி சோதனை செய்து கொள்ளவேண்டும். பங்குதாரராக விரும்பும் பெண்களிடம் நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள், எப்படி பேசுகிறீர்கள் என்பதை எல்லாம் சுயமதிப்பீடு செய்து பாருங்கள். உங்களுக்கு நெருக்கமான தோழிகளோ, நண்பர்களோ இருந்தால் அவர் களிடம் பேசி , உங்கள் அணுகுமுறையில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா? என்று விமர்சிக்கச் சொல்லுங்கள். உங்கள் பேச்சில் பெண்களை தொழில்ரீதியாக ஈர்க்காமல் தனிப்பட்ட முறையில் ஈர்க்கும் தன்மை அதிகம் இருந்தால் அதை சரிசெய்து கொள் ளுங்கள்.
நீங்கள் பெண்களிடம் தொழில்ரீதியாக மட்டும் பேசுங்கள். பேசும்போது பேச்சின் எல்லை முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பேச்சின் எல்லை விரிந்து போவது, பேச்சை பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வது போன்ற வைகளுக்கு அனுமதிக்கவேண்டாம். தொழில் பேச்சாக இருந்தாலும் அதை ரொம்ப சீரியசாக ஆக்கிக் கொள்ளவேண்டியதில்லை. ஜோக் அடிக்கலாம். அன்றாட நடப்புகள் பற்றி பேசலாம். ஊறுகாய் போல் அவைகளை தொட்டுக்கொள்ளுங்கள். எதுவும் எல்லை தாண்டி போகக்கூடாது என்பது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். பிரச் சினைக்குரிய பெண்களோடு தொழில்முறை பேச்சு நடத்தும்போது உதவியாளர் யாரை யாவது உடன் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் அல்லது பொதுவான இடத்தில் பேசுங்கள். தனிப்பட்ட இடங்களுக்கு பெண்களை அழைக்கவோ, நீங்கள் அவர்களால் அழைக்கப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
நீங்கள் எந்த தவறும் செய்யாத போது, திருமணமாகி-குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு பெண் மிரட்டுவதை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அந்தப் பெண்ணிடம் தெளிவாக உங்கள் எண்ணத்தை சொல்லிவிடுங்கள். நல்ல பொருட்களை தயாரிக்கும் ஒரு தொழிலதிபர் தவறான எண்ணத்துடன் பழகும் பெண்ணிடம் தொழி லுறவு வைக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்தப் பெண்ணின் எண்ணங் களில் திருத்தம் ஏற்படவில்லை என்றால், அவளுடனான தொழில் நட்பைக்கூட நீங்கள் துண்டித்துக் கொள்ளலாம்.
-டாக்டர்
***
விவாகரத்து பெற்றதால் கணவனின்றி வாழும் பெண்களுக்கும்- கணவனை இழந்து விதவையாகி நிற்கும் பெண்களுக்கும் செக்ஸ் எதிர்பார்ப்பு விஷயத்தில் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. பொதுவாக விவாகரத்து முடிவுக்கு வரும் பெண்களில் 70 சதவீதம் பேர்வரை அந்த முடிவை அதிரடியாக திடீரென்று எடுத்துவிடுவதில்லை. குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தாவது அவர்கள், தங்கள் எதிர்காலம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்கள். அப்படி சிந்திக்கும்போது, அடுத்து தான் யாரை சார்ந்திருக்கவேண்டும்? அடுத்து தனக்கு கைகொடுக்கும் ஆலோசகர் யார்? விவாகரத்துக்குப் பிறகு சமூகம் தன்னை எப்படிப் பார்க்கும்… என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவர்கள் ஓரளவாவது விடை தேடிவிடுகிறார்கள்.
கணவர் மூலம் மிகுந்த கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் விவாகரத்து பெற்ற பின்பு அடுத்த ஆண்களை அவ்வளவு எளிதாக நம்பி வாழ்க்கையை ஒப்படைத்து விடுவதில்லை. அடுத்து இன்னொருவரை திருமணம் செய்தால் அவரும் முதல் கணவர் போல் நடந்துகொள்வாரோ என்ற பயம் அவர்களுக்குள் இருக்கவே செய்யும். ஆண்மை யின்மை போன்ற கோளாறுகளால் கணவரை உதறும் பெண்கள் அடுத்த திருமணத் திற்கு விரைவாகவே தயாராகிவிடுகிறார்கள். விவாகரத்து பெற்ற பெண்கள் பெரும் பாலும், மறுமணம் செய்யும்போது பெற்றோர் பார்க்கும் வரனை திருமணம் செய்து கொள்வதில்லை. ஒருவேளை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தாலும், அவரைப் பார்த்து, பழகி நன்றாகப் புரிந்துகொண்ட பின்பே திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். பெரும் பாலானவர்கள் தாங்களே ஒருவரை பார்த்துப் பேசி, புரிந்துகொண்டு மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
விவாகரத்து செய்த பெண்கள் விரும்பினால் மறுவாரமேகூட செக்ஸ் வாழ்க்கைக்கு தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள முடியும். அவர்கள் விரும்பினால் சந்தோஷமாக அனுபவிக்கவும் முடியும். ஆனால் கணவரை இழந்த விதவைப் பெண்கள் மீண்டும் திருமணத்திற்கு தயாராகவும், செக்ஸ்க்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும் அதிக காலம் தேவைப்படத்தான் செய்கிறது. அவர்கள் கணவரின் இழப்பைத் தாங்கிக் கொள்ள ரொம்பவும் சிரமப்பட்டுப் போகிறார்கள். கணவர் உயிரோடு இருந்தபோது நெருக்கடிகள் தந்தவராக இருந்தாலும், அவரை இழக்கும்போது ரொம்பவும் நொறுங் கித்தான் போகிறார்கள். ஆயினும் அவர்கள் பெண்மையின் உணர்வுகளையும், தேவை களையும் காலத்துக்கு தக்கபடி புரிந்துகொண்டு தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே தங்கள் மறுமணத்தைப் பற்றி அவர்கள் சிந்திப்பது நல்லது. குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் தங்கள் படிப்பு, மணவாழ்க்கை என்று பிரியும்போது தனிமை அந்த தாயை ரொம்பவும் வாட்டும். `கண வரை இழந்த அந்த காலத்திலே தான் இன்னொரு துணையை தேடி இருக்கலாமே’ என்று அப்போது அவர்கள் வருந்தி எந்த பயனும் இல்லை.