Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிடலாமா?

42

பப்பாளி அதன் பிரமாதமான சுவையின் காரணமாக “தேவதைகளின் பழம்” என்று அழைக்கப்படுகிறது. நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் B ஆகிய சத்துகள் நிரம்ப உள்ளன.

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக எழும் கேள்விகளில் இதுவும் ஒன்று – பப்பாளிப்பழம் சாப்பிடலாமா அல்லது கூடாதா?

கர்ப்பிணிப் பெண்களுக்கு பப்பாளிப் பழம் அல்லது காய் எதுவுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு தரக்கூடியது என்று இந்தியாவில் பரவலாகக் கருதப்படுகிறது, இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பப்பாளியை யாரும் சாப்பிடக் கொடுப்பதுமில்லை, சாப்பிடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கர்ப்பத்தின் போது பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருக்கலைப்பு ஏற்படலாம் அல்லது பிறவிக் குறைபாடு ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது.

கர்ப்பகாலத்தில் பப்பாளி சாப்பிடுவது பற்றிய சில அறிவியல் உண்மைகளைக் காண்போம்:

ஒருவர் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும் காலத்தில் அல்லது கர்ப்பமடைந்திருக்கும் காலத்தில், பப்பாளிக் காயை உண்பது நல்லதல்ல. பப்பாளிக் காயின் பாலில் பப்பாயின் எனும் நொதி உள்ளது, அது வயிற்றில் தசைப்பிடிப்பை ஏற்படுத்தி கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். வெஜிட்டபிள் பெப்சின் என்று அழைக்கப்படும் இந்த பப்பாயின் நொதியானது, செரிமானக் கோளாறுக்கு ஆறுதலளிக்கும். பப்பாளிக் காயின் பால் ஆக்சிட்டோசின் மற்றும் ப்ரோஸ்டாகிளான்டின் ஹார்மோன்களாக செயல்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் தான், பிரசவ காலத்தில் உடலுக்கு பிரசவ அறிகுறிகளைத் தொடங்க சமிக்ஞை கொடுப்பவை. பிரசவத்தின் போது  சிந்த்தட்டிக் ஆக்சிட்டோசின் மற்றம் ப்ரோஸ்டாகிளான்டின் ஆகிய ஹார்மோன்கள் வலிமை கொடுக்க அல்லது பிரசவத்திற்கான தசைச் சுருக்கங்களைத் தொடங்குவதற்குப் பயன்படுகின்றன.
எளிதில் பாதிக்கப்படும் உடல்வாகு உள்ளவர்களுக்கு, பப்பாளியால் கடுமையான ஒவ்வாமை விளைவுகள் ஏற்படலாம். பப்பாளியின் பால் கடுமையான எரிச்சல் உண்டாக்கக்கூடியது. பப்பாளிக் காயில் பால் அதிக அளவில் உள்ளது, பப்பாளிப் பழத்தில் புறக்கணிக்கத்தக்க அளவு சிறிதளவே உள்ளது. ஏற்கனவே கருப்பையில் தசைச்சுருக்கம் அதிக அளவில் ஏற்பட்டதன் காரணமாக குறைப்பிரசவம் அல்லது தன்னிச்சையான கருச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு, சிறிதளவே பப்பாளிப் பாலும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
விலங்கு மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து, பப்பாளி விதையின் சாரத்தில் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய மற்றும் கருவுறும் திறனைப் பாதிக்கக்கூடிய தன்மை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், இதை அறுதியிட்டுக் கூறுவதற்கு அடித்தளமாக மனிதர்களைக் கொண்டு இத்தகைய ஆய்வுகள் எதுவும் செய்ததாகத் தகவல் இல்லை.

முழுவதுமாகப் பழுத்த பப்பாளிப் பழங்கள் கர்ப்பத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று நம்பப்படுவதில்லை, இருப்பினும், கர்ப்பகாலத்தில் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானதா இல்லையா என்றும் உறுதியாகக் கூற முடியாது.