Home இரகசியகேள்வி-பதில் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என்னுடன்தான் படுத்து தூங்குவாள்

பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என்னுடன்தான் படுத்து தூங்குவாள்

156

கேள்வி:- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என்னுடன்தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொட்டு உள்ளேன், ஆடையுடன் அவள் மார்பையும் தொட்டு உள்ளேன். அவள் ஏன் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை? நான் அவள் மனதை கெடுத்து விட்டேனா? குழப்பமாக உள்ளது.

பதில்:- ஒரு ஆண் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை தொடும்போது, பயத்தால் பல பெண்கள் செயலிழந்து விடுகிறார்கள். அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள உறவினர் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும்போது பல இளம் பெண்கள் செய்வதறியாது திகைத்து நடுங்கி விடுகிறார்கள்.

பயம், அருவெறுப்பு, கூச்சம், குழப்பம் இத்தகைய உணர்வுகளால் தாக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதையே சம்மதம் என்று பல ஆண்கள் எண்ணி தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, வயதில் சிறியப் பெண்களைக் கெடுக்கிறார்கள். பல பாலியல் தவறுகள் நடப்பது நெருங்கிய உறவினர்களால் தான்.

வீட்டில் உள்ள பெரியவர்கள், இத்தகைய தவறுகள் எல்லாருடைய வீடுகளிலுமே நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு வளரிளம் பெண்களை யார் வீட்டில் தங்க அனுமதிக்கிறோம். யாருடைய அறையில் தன் பெண் தூங்குகிறாள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிமேல் உங்கள் பெரிய அம்மா மகளுடன் ஒரே அறையில் தூங்க வேண்டாம். அவளாக முன்வந்தாலும் உறுதியுடன் மறுத்துவிடுங்கள். நல்ல நடத்தை வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

கேள்வி: எனக்கு நீண்டகாலமாக உமிழ்நீர் – வாய்நீர் (ஜொள்ளு) வடியும் வழக்கம் உண்டு. அதாவது தினமும் இரவில் தூக்கத்தின்போது எனது தலையணை என் உமிழ்நீரினால் நனைந்து விடும். காலையில் படுக்கையை விட்டு எழாமல் படுத்து இருக்கும் பட்சத்தில் எனது வாய் இந்த உமிழ்நீரினால் நிறைந்து விடும். எழுந்து பல் விளக்கிய பின்னர் எல்லாம் சரி ஆகிவிடும். பகலில் விழித்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, பகலில் படுத்து உறங்கினால் இதே பிரச்சினை.

இந்த ஜொள்ளு நீர் சில நேரங்களில் மஞ்சளாகவும், தடிப்பாகவும், ஏதோ சில நேரங்களில் மட்டும் சிறிய துர்நாற்றத்துடனும், பல நேரங்களில் எச்சில் வடிவதைப்போலவும், சில நேரங்களில் தண்ணீர்போலவும் காணப்படும்.

கிட்டத்தட்ட 20 வயதில் இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்கிறது. இடையில் ஒரு நாள் கூட நின்றதில்லை.

மது, புகைப்பழக்கம் கிடையாது.

ஓவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்சுத்தம் செய்து கொள்வேன். வேறு எந்த வியாதிகளும் இல்லாத அரோக்கியமானவன் நான். ஆனால் இந்தப் பிரச்சினை எனது மனதை வாட்டுகிறது.

திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணமானால் எனது மனைவி அருகில் படுக்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனது தலையணை உமிழ்நீரால் நனைந்துவிடும். இதனால் எவ்வாறு புது மனைவியுடன் ஒரே படுக்கையில் படுக்கப்போகிறேனோ தெரியவில்லை.

பல்வேறு வகையாக உணவுப் பழக்கங்கள் எல்லாம் மாற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும் இல்லை.

டாக்டர் அவர்களே தயவு செய்து இதனை பிரச்சினை தீர உதவி செய்தால் எனது திருமண வாழ்வை சந்தோசமாக ஆரம்பிக்கலாம்.

பதில்: முதலில் உமிழ்நீர் வெளியேறுவது பற்றி சில விளக்கங்கள்.
படுக்கும் போது