நீங்கள் பெண்ணாக இருந்தால..
சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.
என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் மூட் மாறும்.முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.
உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கைகளை மெல்ல வருடி கொண்டே ஏதாவது சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய பவர் உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.
நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் உங்களவர் நெளிய ஆரம்பிப்பார்.
இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.இது பெண்களுக்கு. சரி,
நீங்கள் ஆணாக இருந்தால்…
முதலில் ஒரு பாட்டு பாடிய வாரு உங்கள் துணையை அருகில் அழைத்திடுங்கள் .ஏதாவது ஒரு சிறிய ஆடலுடன் ஊடியதாக இருக்க வேண்டும் பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்
பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான சிக்னல் இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.
உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.
இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.
பெண்கள் எந்த வயதில் கவர்ச்சியாக தெரிகிறார்கள்?
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.
30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.
பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.
கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத்தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.