பாலியல் தொழில் செய்வதற்காக இந்த உலகில் எந்த ஒரு பெண்ணும் பிறப்பதில்லை. மாறாக, தனது வாழ்நாளில் அவள் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளே அந்த பாதைக்கு வழிவகுக்கின்றன.
ஒரு முறை அந்த தொழிலுக்குள் சென்றுவிட்டாள், அதிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களின் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதுபோன்று பாலியல் தொழிலாளிகளாக்கப்படுவதற்கு, ஒரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டினாலும், டெல்லியில் உள்ள பெர்னா சமூகத்தை சேர்ந்த பெண்களின் தலையெழுத்தே இந்த பாலியல் தொழில் என்றாகிவிட்டது.
அதனால் தான் அந்த இனத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் வாழையடி வாழையாக பாலியல் தொழிலை செய்து வருகிறார்கள். இந்த இனத்தில் எந்த பெண்ணும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு பெண்ணும் குரல் கொடுப்பதில்லை, ஏனெனில் அது தான் தங்களின் தலைவிதி என்று நினைத்துக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
குடும்ப சூழலுக்காக இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கை தினமும் அதிகாலை 2 மணிக்கு தொடங்குகிறது.
2 மணிக்கு எழுந்து தங்களை அலங்காரம் செய்துகொண்டு வாடிக்கையாளர்களைக் குளிர்விக்கச் செல்லும் அவர்கள் ஐந்து மணி நேரத்துக்குள் 5 ஆண்களை மகிழ்விக்க வேண்டும். பின் விட்டுக்கு வந்து கணவன், குழந்தைகளுக்கு உணவு தயாரித்து பள்ளி அனுப்பிவிட்டு மீண்டும் தங்கள் பணியைத் தொடங்குவார்கள்.
திருமணம் முடிந்து 5 குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கூட, பலர் இந்த தொழிலை அவர்களுடைய கணவன்மார்களின் வற்புறுத்தலால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதற்காக இடைத்தரகர்களும் உள்ளனர். ஒரு பெண் ஒரு இரவுக்கு 10 ஆண்களை திருப்திபடுத்த வேண்டும். குறைந்த பட்சம் 200 ஆண்களோடு போராட வேண்டிய நிலையும் ஏற்படும்.
டெல்லியில் ஏதேனும் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தால் அது தலைப்பு செய்தியாகி