Home பாலியல் பாலியல் நோய்கள்

பாலியல் நோய்கள்

145

பாலியல் தொற்று நோய்கள் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை முந்திய இந்த இடுகையில் பார்த்தோம்.இனி ஒவ்வொரு பாலியல் தொற்று நோய்கள் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.

கொனோரியா(Gonorrhea)

இது நிஸ்சோரியா கொனோரியா(Nisseria gonorrhea) எனப்படும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும். தொற்று ஏற்பட்டு .. தொடக்கம் .. நாட்களில் இந்த நோய் வெளிக்காட்டப்படும்.

இது ஆண் பெண் என இரு பாலாரையும் பாதித்தாலும் பிரதானமாக் குணங்குறிகளை வெளிக்காட்டுவது ஆணில் ஆகும்.

ஆண்களில் ஏற்படும் அறிகுறிகள்.

ஆண் உறுப்பில் இருந்து மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்

நோயினால் பாதிக்கப்பட்ட ஆணுறுப்பு

பெண்களிலே ஏற்படும் அறிகுறிகள்

பெண்களின் கருப்பைக் கழுத்துப் பகுதியே தொற்றுக்கு உள்ளாகும்.
அநேகமான பெண்களில் நோய் தோற்றி இருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுவதில்லை.

சில பெண்களில் சில அறிகுறிகள் ஏற்படலாம். அவையாவன.

பிறப்புறுப்பின் ஊடாக மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
மாதவிடாய் ஒழுங்கின்றி நடைபெறுதல்
அடிவயிற்றில் நோவு ஏற்படுதல்

நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுறுப்பு

இது தவிர வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு தொண்டைக் கரகரப்பும் , தொண்டையில் தோற்றும் ஏற்படும்.

குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு குடல் தொற்று ஏற்படலாம்.

கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் ஏற்படுமானால் பிறக்கின்ற குழந்தையின் கண்களிலே தொற்றுக்கள் ஏற்படலாம். இவ்வாறு கண்களிலே தொற்று ஏற்பட்ட குழன்ற்ஹைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.