Home இரகசியகேள்வி-பதில் கேள்வி பதில் பாலியல்

கேள்வி பதில் பாலியல்

174

கேள்வி

டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைவான அளவிலேயே விந்துகள் வெளியேறுவதாய் உணர்கிறேன்.
இதை எப்படி சரி செய்வது.(தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம்)

பதில்

விந்து(Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப்
பாயம்( Seminal fluid)எனப்படும். இதிலே விந்துகள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான
பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும்.ஒருதடவையில் வெளியேறும் சுக்கிலம் பாயத்தின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும்
அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு.அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

கேள்வி

டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் தொடர்ச்சியாக இரத்தம் போகிறது.இவ்வாறு எத்தனை மாதம்
வரை இரத்தம் போகலாம்.?

பதில்

குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பெண்ணுறுப்பு வழியே இரத்தம் போன்ற திரவம் தொடர்ச்சியாக வெளிவரும்.
இது முற்று முழுதாக இரத்தம் அல்ல .இரத்தத்தோடு ,கருப்பையின் உட்பகுதியில் இருந்து பிரிந்து வரும் பகுதிகள்
போன்றவையோடு வேறு பல சுரப்புகளும் சேர்ந்து வெளிவரும். இது லோக்கியா ..எனப்படும். ஆரம்ப ஒரு வாரகலத்திற்குள்
இவ்வாறு வெளிவருவது சிவப்பு நிறமாக இரத்தம் போலவே இருப்பதால் அது ரெட் லோக்கியா எனப்படும்.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதன் நிறம் இள மஞ்சள் நிறமாகவும் பின்பு வெள்ளை நிறமாகவும் வெளியேறும்.

அப்படியல்லாமல் குழந்தை பிறந்த பின்பு தொடர்ச்சியாக இரத்தமே வெளியேறுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக
வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை பிறந்து ஒரு நாளின் பின் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறினால் கூட
அசாதாரணமானது.

நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு
முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது நிறய ரத்தம் விபத்தில் சேதமாகிவிட்டது காலில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதோடு பெல்விஸ் எனப்படும் காலும்
இடுப்பு எலும்பும் இணையுமிடத்தில் எலும்பு முறிவு அது பெட் ரெஸ்டில்
சரியாகிவிட்டது. கடந்த 3 மாதங்களூக் முன்பு வரை மாதவிடாய் சரியாக வந்து
கொண்டிருந்தது ஆனால் கடந்த 3 மாதமாக மாதவிடாய் ஆகவில்லை இதே போல்
எப்பவாவது ஒரு முறை பிரச்சணை இருக்கும் 2மாதம் மாதவிடாய் ஆகாமல் இருந்து
மறுபடி ஆவேண் ஆணால் இந்த முறை 3 மாதங்களாகியும் ஆகவில்லை. என்ன காரணம்
என்று கொஞ்சம் விளக்குங்கள் . நான் எந்த தவறும் செய்யவில்லை . கடந்த ஆறு
மாதங்களாக நன்றாக நடக்க முடியாத நிலை விபத்தின் காரணமாக தற்பொது நன்றாக
நடக்கிரேண் . கொஞ்சம் எடை கூடியுள்ளது தயவுசெய்து என்ன செய்யட்டும் என்று
என் MAIL ID கு தமிழில் பதில் அளியுங்கள்.

பதில்

நல்லது சகோதரி.
மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் பிந்திப்போவதற்கு
பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம்.
அதிலே முக்கியமான ஒரு காரணி மன உளைச்சல் ஏற்படுவதாகும்.கடந்த மூன்று
மாத காலமாக உடல் சுகவீனமுற்று இருந்த உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் பிற்போகி இருக்கலாம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் பழைய நிலைக்குத் திரும்பும் போது மாதவிடாயும் சீராகும்.

ஆனாலும் உங்க்கள் உடல் நிறை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளதோடு முன்பும்
ரெண்டு மாதமளவில் மாதவிடாய் பிந்திப் போவதாக கூறியுள்ளதால் உங்களுக்கு
சூலக நீர்க்கட்டிகள் பிரச்சினை (PCOD)இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.