Home சூடான செய்திகள் மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்

31

பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் பிரசவ வேதனை நிகழ்ச்சி வாரத்திற்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி போலியான உறை ஒன்று ஆண்களின் அடிவயிற்றில் கட்டப்படுகிறது. அதன் வழியாக வயிற்று பகுதியில் ‘எலெக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் குறைவாக கொடுக்கப்படும் அந்த ஷாக் நேரம் செல்ல செல்ல அதிகப்படுத்தப்படுகிறது. அது உடலில் பிரசவ வேதனை போன்ற வலியை ஏற்படுத்தி உணர செய்கிறது. இந்த சோதனையில் ஈடுபட 100 ஆண்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.