மூல நோய் இருப்பவர்கள் கோடைக்காலத்தில் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். மூல நோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். அதில் மலச்சிக்கல், உடல் பருமன், பரம்பரை நோய்கள், எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் கர்ப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை
மூல நோயில் இருந்து விடுபட நார்ச்சத்து மிகுந்த சரிவிகித டயட்டுடன் அன்றாட உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழியாகும். அதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியைப் பின்பற்றினால், மூல நோயினால் சந்திக்கும் அவஸ்தையில் இருந்து விரைவில் விடுபடலாம். சரி, இப்போது மூல நோயில் இருந்து எளிதில் விடுபட உதவும் இயற்கை வழி குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்: கற்றாழை இலை – 1 அலுமினிய தகடு
செய்முறை #1 முதலில் கற்றாழை இலையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2 பின் அந்த ஒவ்வொரு துண்டுகளையும் அலுமினிய தகடு கொண்டு சுற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
செய்முறை #3 பின்பு இரவில் படுக்கும் முன் உறைய வைத்த ஒரு கற்றாழை துண்டை எடுத்து, அலுமினிய தகடை நீக்கி, பின் அதை குத வாயில் சொருக வேண்டும்.
குறிப்பு இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம். மூல நோய் அசௌகரியங்கள் மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்கள் என்பது, வலி, எரிச்சல், இரத்தம் வடிதல், குத வாயின் வழியே சளி வெளியேற்றம், குத வாயில் அரிப்பு போன்றவையாகும்.