சேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா.இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு.
அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா… அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார்.
அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம்.
ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம்.
இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்:
படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம்.
அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ