சிவப்பு நிறத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பென்றே தெரியவில்லை. செக்கச் செவேலென்று எதைப் பார்த்தாலும் “மதம்“ பிடித்துக்கொள்கிறது எனக்கு. படுக்கைக்குத் தயாராகும் போதுகூட சிவப்புக் கலர் புடைவையை கட்டிக்கொள்ளும்படி என் மனைவியை வற்புறுத்துகிறேன். இது தவறா?
தெரிந்துகொண்ட விஷயங்களை ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி செயல்படக் கூடியது மனித மூளை. அதுதான் இந்த சிவப்புக் கலர் பிரச்னைக்கும் காரணம்.
சிறு வயதில் குறும்பு செய்துவிட்டு அடிவாங்குகையில் ஸ்கேல்-அடி-வலி-பயம் என்று மனசு ஒரு சமன்பாட்டினை போட்டு வைக்கிறது. பிறகு அடி விழாவிட்டாலும் வெறும் ஸ்கேலை காட்டி மிரட்டினாலே பயம் உண்டாகிவிடுகிறது. இதைத்தான் “பக்குவப்படுத்துதல்“ என்போம். இந்த கண்டிஷனிங் முறையில்தான் நாம் எல்லாவற்றையுமே கற்றுக்கொள்கிறோம். காமம் உள்பட.
நீங்களும் “சிவப்புக் கலர்-காமக்களிப்பு“ என்ற ஃபார்முலாவை எப்படியோ கற்றுக் கொண்டுள்ளீர்கள். அதனால்தான் காமசுகம் வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் சிவப்புக் கலர் உடை அணிய வேண்டும் என்று மனைவியை வற்புறுத்துகிறீர்கள். இதற்கு உங்கள் மனைவியும் ஒத்துழைத்தால் நோ பிராப்ளம்