Home பாலியல் பாலியல் உணர்வு அதிகம் மூழ்குவது ஆண்களா? பெண்களா?

பாலியல் உணர்வு அதிகம் மூழ்குவது ஆண்களா? பெண்களா?

30

மனிதர்களுக்கு உணவு, உறக்கம் போல பாலுணர்வும் முக்கியமானதுதான். வேலைப்பளு நிறைந்த இன்றைய கால கட்டத்தில் தம்பதிகளுக்கு இடையேயான புரிதல், பாலியல் ரீதியான தொடர்புகள், அரிதாகி வருகின்றன.
பணிச்சூழல் பாலியல் உணர்வுகளை மறக்கடித்து வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதனாலேயே தம்பதிகளுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது.
மனிதர்களின் பாலியல் உணர்வு, சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு பாலியல் குறித்த சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டுள்ளது.

அந்த சிந்தனை பற்றி ஆய்வு:
ஓஹியோ பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தினர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள், ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்கள், என்ற கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த பதில்களை தொகுத்து சுவாரஸ்யமான தகவல்களுடன் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சாப்பாடு, தூக்கம்:
ஆண்கள் ஒரு நாளைக்கு 25.1 முறை சாப்பாடு குறித்து சிந்திக்கிறார்களாம். தூக்க உணர்வு 33 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிறதாம். சாப்பாட்டு ராமன்களாகவும், கும்பகர்ணன்களாகவும் ஆண்களே அதிகம் உள்ளனர்.
பெண்களின் தூக்கம்:

அதேபோல 8 மணி நேரத் தூக்கத்தையும் பெண்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறார்களாம். அதில் சமரசம் செய்வதில்லையாம். அதேபோல ஒரு நாளைக்கு சராசரியாக 13.4 முறை தூக்க உணர்வைப் பெறுகிறார்களாம். அதாவது 72 நிமிடங்களுக்கு ஒருமுறை தூக்க உணர்வு வருமாம்.

செக்ஸ் உணர்வு:
ஆண்களுக்குத்தான் பாலுணர்வு உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட அத்தனையிலும் விருப்பம் அதிகமாக இருக்கிறதாம். 59 சதவீத ஆண்கள் ஒரு நாளைக்கு பலமுறை உடல் உறவு குறித்து சிந்திக்கிறார்களாம்.

எத்தனை முறை:
ஆண்கள் 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் சிந்தனையில் மூழ்கிப் போவதாக கடந்த ஆய்வுகளில் கூறப்பட்டிருந்தது. அப்படி ஆண்கள் ஒரு நாளைக்கு 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் உணர்வை அடைவதாக இருந்தால் சராசரியாக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 514 முறை அந்த நினைப்பில் மூழ்குவதாக வருமாம்.

ஒரு நாளைக்கு 34 முறை:
தற்போதைய புதிய ஆய்வானது ஆண்கள் 28 விநாடிகளுக்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவதாக கூறுகிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு 34.2 முறை செக்ஸ் உணர்வில் மூழ்கித் திளைக்கிறார்களாம்.

பெண்களின் நினைப்பு:
பெண்களைப் பொறுத்தவரை 51 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் அந்த நினைப்பு வருகிறதாம்.அதாவது ஒரு நாளைக்கு 18.6 முறைதான் அவர்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குகின்றனராம். பெண்களைப் பொறுத்தவரை 45 சதவீதம் பேர்தான் பலமுறை அந்த உணர்வில் ஆழ்ந்து போகின்றனர்.
அந்த நினைப்பு அவசியம்தான்:
வாழ்க்கையில் உடல் உறவு என்பது முக்கியமானது என்பதையே இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி பெண்களை விட ஆண்களுக்கே அந்த நினைப்பு அதிகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது இந்த ஆய்வு.