பாலியல் தகவல்:சரியா, தப்பா ?
செக்ஸ் டாய்ஸ்… கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் அதிக அளவில் விற்பனை ஆகும் பொருள்களில் இதுவும் ஒன்று.
இந்தியாவில், குறிப்பாக சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து செக்ஸ் பொம்மைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்கிறார்கள்.
இந்தியா வில் செக்ஸ் பொம்மைகளை வெளிப்படையாக விற்பதற்கு சட்டப்படி தடை இருப்பதால் ஆன்லைனில் இதற்கு ஏக கிராக்கி. ஆண், பெண் இருபாலரும் எதிர்பாலரின் துணையின்றி தங்களின் உடல் ச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை இவை.
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலங்களில் இருந்தே இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.நம் சமுதாயத்தில் ஒரு பருவமடைந்த ஆண் படித்து முடித்து, வேலை தேடி, பெண் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வதற்கு ஏறக்குறைய 30 வயது ஆகிவிடுகிறது. அனால் 11 வயதில் பருவமடையும் ஓர் ஆண், 18 வருட காலம் தனது செக்ஸ் இன்பத்தை அடக்கி வைத்துக்கொள்வது என்பது சாத்தியம் இல்லை.
உணவு, நீர் போல செக்ஸும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதே. இந்த வாலிப கட்டத்தில் இருப்பவர்கள் விலைமாது போன்றவர்களை நாடினால் நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சமயங்களில் இது போன்ற பொருட்கள் அவர்களுக்கு ஒரு வடிகாலாக இருக்கும்.
இந்த கருவிகள் மூலமாக எச்.ஐ.வி, பால்வினை நோய்கள் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இது நாகரிகம், பண்பாடு சீர்கெடுக்குமா அல்லது பாலியல் குற்றங்களை தவிர்க்குமா?