Home பாலியல் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்.!!

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்.!!

98

ஒரு நாளைக்கு இத்தனை தடவைதான் உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள் வருடத்திற்கு அண்ணளவாக 150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது மருத்துவரோ அல்லது வேறு யாருமோ தீர்மானிப்பதல்ல. உங்கள் மனைவியோடு உறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு. அதற்குப் போதைய வலு உங்கள் இருவரின் உடலிலும் இருந்தாலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதுவும் திருமணமான புதிதில் இது சகஜமே. இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல். மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபடும்.

இதனால் அவர்களின் உடல் நிலையும் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும். ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாக உறவில் ஈடுபட்டு விட முடியும். ஆனால் பெரும்பாலான பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை. பெண்களின் இந்த உடல் நிலை/மனநிலை மாற்றம் இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடை.
அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும். அதேபோல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும். இது பெண்ணுக்குப் பெண் வேறுபடுவதால் ,கணவன் – மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.
அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது பாலியல் வல்லுறவுக்குச் சமன். சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது சட்டத்தின் முன் குற்றமாகவே கருதப்படும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. இத்தனை முறை தான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.
திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உறவில் ஈடுபடுபவர்கள் கூட நாளடைவில் குறைத்துக் கொள்ளக்கூடும். வீட்டுச் சூழல், லைஃப் ஸ்டைல், தனிமையின்மை, நேரம் கிடைக்காமை போன்ற காரணங்களால் செக்ஸில் ஈடுபடுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரலாம்.
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை. நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இனிய மண வாழ்க்கை
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம்.
ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.
நரம்பியல் கோளாறுகள் தீரும்
4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பக்குவமடையும் மனம்
எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்சன் ஆகும் குணமுடையவர்கள், காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.