Home ஜல்சா ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் விடுதியில் தற்கொலை செய்த மாணவி

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் விடுதியில் தற்கொலை செய்த மாணவி

35

அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அங்கு தங்கியிருந்து 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது அறையில், பிஏ படிக்கும் அவரது அக்காளும் தங்கியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று 11-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி தன் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அக்கா வகுப்பு முடிந்து அறைக்கு திரும்பியபோது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. பின்னர் விடுதி ஊழியர்கள் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, மாணவி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே விடுதியில் தங்கிப் படிக்கும் சகோதரிகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவரது அக்காள் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஓரினச்சேர்க்கை சகோதரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.