ஒரே ஆணுடன் நீண்டகாலமாக, வாழும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை படிப்படியாகக் குறையும் என்று, தெரியவந்துள்ளது.
ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று நடத்திய ஆய்விலேயே இவ்வாறு தெரியவந்துள்ளது. இதுபற்றி கடந்த 7 ஆண்டுகளாக, ஃபின்லாந்தில் வசிக்கும் 2000க்கும் அதிகமான மாணவிகள், இளம் பெண்கள், திருமணம் ஆனவர்கள் என பலதரப்பு பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்முடிவில், பள்ளி வயதில் தொடங்கி சக ஆணுடன் காதல் கொள்ளும் பெண்கள், அதே உறவில் நீண்ட காலம் நீடித்தால் அவர்களின் செக்ஸ் ஆசை குறைய தொடங்குவதாக, தெரியவந்துள்ளது.
இதேபோன்று, இளம் பருவத்திலும் இந்நிலையே பெண்களுக்குக் காணப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகும்கூட இத்தகைய பிரச்னைகள் பெண்களுக்கு எழுவது வழக்கமாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே ஆணுடன் செக்ஸ் பகிர்ந்து கொள்ளும் பெண்களே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் கால அவகாசம் கிடைத்தாலும் அதற்கான திருப்தி கிடைக்காதது, ஒரே விதமான செக்ஸ் பழக்க முறைகள் போன்றவையே பெண்களின் ஆசையை குறைத்துவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிக இளம் வயதிலேயே செக்ஸ் உறவுக்கு ஆட்படும் பெண்களுக்கே, இத்தகைய பிரச்னை அதிகளவில் ஏற்படுகிறது. அதேசமயம், பருவ முதிர்ச்சி பெற்ற பின், ஏற்படும் செக்ஸ் உறவால், அவர்களுக்கு திருப்தி கிடைக்கச் செய்வதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.