Home உறவு-காதல் அஜாக்கிரதையாக இருந்தால் ஆபத்தே! ஒருதலைக்காதல் விபரீதங்கள்

அஜாக்கிரதையாக இருந்தால் ஆபத்தே! ஒருதலைக்காதல் விபரீதங்கள்

126

imagesஇன்றைய காலகட்டத்தில் ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.

என்னை வேண்டாம் என உதறியவளுக்கு இது தான் கதி என கொலைக்காரர்களாக மாறிவிடுகின்றனர் ஆண்கள்.

இதிலிருந்து தப்புவது எப்படி? மிக கவனமாக கையாள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

அஜாக்கிரதையாக இருந்தால் ஆபத்து நிச்சயம் தான். நிஜத்தில் காதலை ஏற்பதைவிட, காதலை மறுக்கத்தான் நிறைய துணிச்சல் தேவைப்படுகிறது.

துணிச்சலுடன் சாதுரியமும், சாமர்த்தியமும் கலந்து செயல்படுவது அவசியம்.

ஒருபோதும் அவர்களது ஈகோவை தூண்டும் வகையில் கடுமையாக பேசக்கூடாது.

தெரிந்த நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் சொல்லி அவர்களை விட்டு மிரட்டுவது கூடாது.

உன் தகுதி என்னனு தெரியுமா? உனக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூடா எட்டாது? நீயெல்லாம் என்னை லவ் பண்றியா? என கடுமையான சொற்களால் வீசக்கூடாது.

அவர்கள் காதலை வெளிப்படுத்திய உடன், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் எதனால் என மிக தெளிவாக அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக்கூற வேண்டும்.

‘காலம் கனிந்தால் உங்கள் அன்பை ஏற்கிறேன். இல்லையென்றால் நாம் என்றும் நட்புடனே இருக்கலாம். இதற்குமேல் என்னை வற்புறுத்த வேண்டாம்’ என நாசூக்காக மறுக்கலாம்.

பின்னர் அவரை புறக்கணிப்பது தெரியாமலே மெல்ல பேச்சு வழக்கை குறைக்க வேண்டும், சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணங்கள் அவர் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஒருகட்டத்தில், என்னை விட சிறந்த துணை உங்களுக்கு கிடைப்பாள் என நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசி புரியவைக்கலாம்.

எதுவுமே முடியவில்லை என்ற பட்சத்தில் பெற்றோரின் உறுதுணையுடன் காவல்துறை உதவியுடன் முடித்துக் கொள்ளலாம்.

ஒருதலைக்காதலால் விபரீதத்தில் இருந்து தப்பிப்பது அவரவரின் சாமர்த்தியமே!!!