Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் எண்ணெய் பசை சருமத்தை அழகு செய்யும் தகவல்

பெண்களின் எண்ணெய் பசை சருமத்தை அழகு செய்யும் தகவல்

74

அழகு தகவல்:கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களது சருமத்தில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும். எண்ணெய் பசை சருமத்தை, நம் வீட்டில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டு போக்கலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இரு சருமத்துளைகளை இறுகச் செய்து, எண்ணெய் பசை சருமத்தில் இருந்து விடுவிக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள்.

முதுமைத் தோற்றத்தை அளிக்கும் சருமத்தை இறுகச் செய்வதற்கு, முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

எலுமிச்சை சாற்றினை 1 டீஸ்பூன் எடுத்து, 1 டீஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து, பஞ்சுண்டைப் பயன்படுத்தி, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. வெள்ளரிக்காயை வெட்டி, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளரிக்காய் சாற்றில் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவலாம்.

கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, நன்கு காய வைக்க வேண்டும். பின் நீரால் முகத்தைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.