Home சமையல் குறிப்புகள் சுவையான ஓட்ஸ் – கோதுமை மாவு ஊத்தப்பம்

சுவையான ஓட்ஸ் – கோதுமை மாவு ஊத்தப்பம்

32

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – அரை க‌ப்
கோதுமை மாவு – அரை க‌ப்
அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
ர‌வை – ஒரு ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – தேவையான‌ அள‌வு

வ‌த‌க்கி சேர்க்க‌ :

வெங்காய‌ம் – ஒன்று
ப‌.மிள‌காய் – ஒன்று
மிள‌கு – ஐந்து
சீர‌க‌ம் – கால் தேக்க‌ர‌ண்டி
ந‌ட்ஸ் (முந்திரி (அ) பாத‌ம் (அ) வால்ந‌ட் – பொடியாக‌ நறுக்கியது ஒரு தேக்க‌ரண்டி
கேர‌ட் துருவல் – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, ர‌வை உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் நட்ஸை போட்டு வறுக்கவும் அடுத்து வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவலை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின் தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்கவும்.

* நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சுவையான ஓட்ஸ் கோதுமை மாவு ஊத்தப்பம் ரெடி.