Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பருமனால் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் குறைபாடுகள்

உடல் பருமனால் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் குறைபாடுகள்

97

பெண்கள் உடல் கட்டுபாடு:உடல்பருமன் உள்ள பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் காரணிகளாக, அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், முறையற்ற உணவு பழக்கங்கள், உடல் பருமன், திருமண வயது, மன அழுத்தம் போன்ற பலவற்றை கூறலாம். உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிப்பதால் செயற்கை முறையில் (IVF) கருத்தரிக்கும் பெண்களுக்கு குறைந்த சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

உடல் பருமன் அதிகம் உள்ள ஆண்களில் கருவாக்க தன்மையினை தீர்மானிக்கும் ஹார்மோன்களான “டெஸ்ட்டோஸ்டீரோன்” மற்றும் “கோனடொட்ரோபின்” போன்றவற்றின் அளவுகள் குறைவாகவும் ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் என்பது “பாடி மாஸ் இன்டெக்ஸ்” (BMI) எனும் ஒரு அளவுகோலால் அளவிடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ள ஆய்வின்படி “இந்தியாவில் மட்டும் 4 கோடி பேருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கும்” என்றும் எச்சரிக்கிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைவு, டி.என்.ஏ சிதைவு, உயிரோட்டம் அனைத்தும் ஆண்கள் குழந்தையின்மையை அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தி திறன், உயிரோட்டம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது.