Home இரகசியகேள்வி-பதில் என் மனைவி உடலுறவில் இன்பம் தரவில்லை ? என்ன செய்வது ?

என் மனைவி உடலுறவில் இன்பம் தரவில்லை ? என்ன செய்வது ?

199

கேள்வி: எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன் னமும் சுய இன்பப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.

இன்னும் சொல்வதானால், அதில் கிடைக்கும் சந்தோஷம் மனைவியிடம் கூட எனக்குக் கிடைப்பதில்லை. இது தவறா?

பதில்: இல்லை. திருமணமான புதிதில், மனைவியுடனான உறவு திருப்தியும் சந்தோஷமும் தரலாம்.

ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல, மிகச் சிலருக்கு சலிப்புத் தட்டும். அவர்கள், கற்பனை உலகில் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு, புதிதாக ஒருவர் தேவைப்படலாம்.

அதில் பல சிக்கல்கள் இருப்பதனால், சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

இவ்வாறான நிலையில், கற்பனையில் தனக்குப் பிடித்த ஒருவருடன் உறவு கொள்வதாக எண்ணங்களை வடிவமைத்துக் கொள்வதால், ஒப்பீட்டு ரீதியில் உங்களுக்கு அதிக சந்தோஷத்தை உணர்கிறீர்கள்.

நீங்களும் இத்தகையவராக இருந்தால், தாராளமாக இரண்டையுமே மேற் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால், சுய இன்பப் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டீர்களானால், மனைவியு டனான உறவு உங்களுக்கு நிச்சயமாக அதே பழைய சந்தோஷத்தை மீட்டுத் தரும்

=========================
கேள்வி: அந்தரங்கம் பகுதியில் பல தடவைகள், விந்து விரைவாக வெளியேறுவதை ஒரு கேள்வியாகப் பார்த்தி ருக்கிறேன். எனக்குத் தலைகீழ். எனக்கு விந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், என் மனைவி உறவுக்குத் தயங்குகிறார்.

இதற்கு என்ன செய்யலாம்?

பதில்: உங்கள் வயது மற்றும் உங்களுக்குத் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் என்பது பற்றிய விபரங்கள் இல்லை.

அந்த விபரங்கள் உங்கள் பிரச்சினைக்கான தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை மறவாதீர்கள்.

திருமணமான புதிதிலும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான நிலை தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு. இந்தப் பிரச்சினைக்கு மனதின் அதாவது எண்ணங்களின் உதவி தேவைப்படுகிறது.

யதார்த்தத்தில் எவ்வாறு இருந்தாலும், மனதில் கிளர்ச்சியூட்டக்கூடிய காட்சிகளை உருவகிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினை தீரும்.

அப்படி இல்லையேல், உணர்வெய்தும் வரையில் உறவின் வேறு நிலைகளைக் கையாளலாம்.

அல்லது, உங்கள் மனைவி உணர்வெய்தியபின் நீங்கள் சுயமாகவே விந்தை வெளியேற்றலாம். ‘கொக் ரிங் வைப்ரேட்டர்’ என்ற ஒரு சாதனம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர் களா? இது ஒரு மெல்லிய அதிர்வூட்டும் வளையம்.

இதை, உங்கள் மர்ம உறுப்பின் நுனிப்பகுதியில் பொருத்துவதன் மூலமும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். எனினும், இத்தகைய உபகரணங்கள் இலங்கையில் கிடைக் கின்றனவா என்பது சந்தேகமே.

அப்படியே கிடைத்தாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்

===============================
கேள்வி: எனது வயது 48. எனது மனைவிக்கு 37. பிள்ளைகள் இருவர் உள்ளனர். நான் பலசரக்குக் கடை ஒன்றை நடத்தி வருகின்றேன். எனது ஆணுறுப்பு தற்போது சிறுத்து வருகின்றது. பருமனும் குறைந்துள்ளது. வைத்தியரை நாடினேன். அவர், எனது உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறுகின்றார். இதனால், தாம்பத்திய வாழ்க்கை இனிக்கவில்லை. உதவி செய்வீர்களா?

பதில்: பிரச்சினை உங்கள் உடலில் அல்ல, உங்கள் தொழி லில்தான் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் அதுதான் உண்மை.

பொதுவாக, இறுக்கமான உள்ளாடைகளை நீண்டநேரம் அணிந்தபடி இருப்பதால் இந்தப் பிரச்சினை தோன்ற வாய்ப்புகள் உள்ளன. உங்களது தொழிலைப் பொறுத்தவரையில், தினமும் அதிகாலை முதல் இரவு வரை உள்ளாடை அணிந்தபடியே நீங்கள் வேலை செய்து வர வேண்டியிருக்கும். இதனால் இந்தப் பிரச்சினை தோன்றியிருக்கலாம்.

மேலும், பலசரக்குக் கடையைப் பொறுத்தவரையில், எந்நேரமும் கடைபற்றியும், வாடிக்கையாளர்கள் பற்றி யுமே சிந்திக்க வேண்டியிருப்பதாலும், மனதளவிலும் உறவின் மீதான ஆர்வம் மிக நீண்ட நேரத்துக்கு எழாதி ருக்கலாம்.

அதே தருணத்தில் வயது செல்லச் செல்ல ஆணுறுப்பு சிறுத்துவிடும் என்பது உண்மையல்ல.

எனவே, நம்பிக்கையான ஒருவரை வேலைக்கு அமர்த்திவிட்டு, வேலை நேரத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள்.

காதலும், காமமும் சொல்லி வருவதில்லை.

அவை இயல்பாக எழுவதற்கான சந்தர்ப்பத்தை நாம்தான் உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.

எனவே, சந்தர்ப்பம் பார்த்து கடையிலேயே அதிக நேரத்தைச் செலவிடாது, அவ்வப்போது வீட்டுக்குச் சென்று வர முயற்சி செய் யுங்கள். வயதும் வளமையும் இருக்கும்போதே இன்பத்தை நுகர்வதே சிறந்தது.