அன்றாட வாழ்கையில் முக்கியமானவை என்றால் நல்ல உடுப்பு, வயிறார சாப்பாடு மற்றும் நிம்மதியான உறக்கம். இந்த மூன்றும் சரியாக இருந்தால் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் சிலருக்கு தூக்கத்தில் பிரச்னை இருக்கும். சரியான ஆழ்ந்த தூக்கம் இருக்காது. தூக்கமின்மையை இருந்து வெளிவர இதோ குறிப்புக்கள்.
வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
சரியான தூக்கம் இல்லையா..? இந்த குறிப்பை பயன்படுத்தி பலன் பெறுக..!
மேலும், திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து தினமும் படுக்கும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.