பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது தான் சுகாதாரம் என கருதுவோரும் உண்டு.
ஆனால், அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மேலும், சிலர் தினமும் குளிக்க கூடாது, சிலர் ஒருவேளை கூட குளிப்பதை தவிர்க்க கூடாது.
இனி, குளிப்பது சார்ந்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் பற்றி பார்க்கலாம்…
இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் 1000 வகையிலான பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. கதவில் கைப்பிடியில் ஆரம்பித்து, குப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நாமே அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
இதில் சில வகை பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு நன்மையையும் விளைவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Home ஆரோக்கியம் இரண்டு நாட்கள் நீங்கள் குளிக்காமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தெரியுமா?