Home பெண்கள் அழகு குறிப்பு மூ‌க்‌கி‌ன் ‌மீதான மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையா?

மூ‌க்‌கி‌ன் ‌மீதான மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையா?

51

Noseஅது என்ன மூக்கின் மீதான முக்கியப் பிரச்சினை என்ற கேள்வியோடு ஒரு சிலரும், ஆமாம்… அதுதான் பிரச்சினை என்று தெரிந்து கொண்டு சிலரும் வந்திருப்பீர்கள்.

அது என்னவென்றும், அதற்கு என்னதான் தீர்வு என்றும் பார்க்கலாம்.

பெரும்பாலான பெண்களுக்கு மூக்கின் மீது சில வெண்ணிற திசுக்கள் வெளிவரும். இதனை நகங்களால் சுரண்டி பெரிய வடுக்களை ஏற்படுத்தி விடுவார்கள்.

மூக்கின் இரண்டு பக்கத்திலும் நமது நகங்கள் பட்டு பட்டு கருநிறமே வந்திருக்கும்.

கடைகளில் இதற்கென்று சில பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று எல்லோருக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் ஒரு அரிய தீர்வு எந்த மாமருந்தும் இல்லை.

எல்லோரும் மூக்கினை நகத்தால் சொறண்டிவிடுவது சரி… ஆனால் அதை எப்போது செய்ய வேண்டும் என்பதுதான் தெரியாமல் உள்ளது.

குளிக்கும் போது மூக்கின் மீது சோப்பினைப் போட்டுவிட்டு அதிகமாக 1 நிமிடம் மூக்கினை சுற்றி சொறண்டி விட்டால் போதும். முக்கியப் பிரச்சினை களைந்தேப் போகும்.

இதனால் நமது தோலும் எந்த பாதிப்பும் அடையாமல், வர வேண்டிய திசுக்களும் வெளிவந்துவிடும்.

தினமும் எல்லாம் செய்ய வேண்டாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் கூட போதும்.