ஆணாகட்டும், பெண்ணாகட்டும்ஸ ஒருவர் மூக்கும் முழியுமாக இருந்தால் அவரை லட்சணமாக இருப்பதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு ஒருவரின் அழகில் முக்கியத்துவம் பெறுகிறது, மூக்கு. இந்த இதழில், மூக்கழகை பற்றிப் பார்க்கலாம்.
பார்லர்
”மூக்குக்கு மேல கோபம் சிலருக்குதான் வரும். ஆனா, மூக்குக்கு மேல பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ், கரும்திட்டுக்கள் எல்லாருக்கும் வரக்கூடியதுஸ” என்று ஆரம்பித்த ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ஸின் சீனியர் டிரெயினர் பத்மா,
”பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸுக்கான பார்லர் ட்ரீட்மென்ட்னு பார்த்தா, ஃபேஷியல் மட்டும்தான். மூக்கின் ஓரம் வரும் கரும்திட்டுக்களுக்கு தீர்வு, ஸ்கின் லைட்டனிங் ஃபேஷியல். எல்லா ஃபேஷியல்களையும் போல ஸ்கின் லைட்டனிங் ட்ரீட்மென்ட்டுக்கும் முதல் ஸ்டெப், க்ளென்ஸிங். இது சருமத் துவாரங்களைத் திறந்து உள்ளிருக்கும் அழுக்கை வெளியேத்தும். இதைத் தொடர்ந்து டோனர் உபயோகிக்கிறதால, திறந்திருக்கும் சருமத் துவாரங்கள் மூடிடும். அடுத்ததா, ஃப்ரூட் ஆசிட் கலந்திருக்கும் எக்ஸ்ஃபோலியேட் ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழிச்சு துடைச்சுடுவோம்.
அடுத்ததா, பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸை அதற்கான டூல் கொண்டு நீக்கிட்டு, டோனர் அப்ளை செய்வோம். டோனர் காய்ஞ்சதும், மசாஜ் க்ரீம் பயன்படுத்தி மசாஜும், தொடர்ந்து சீரமும் அப்ளை செய்வோம். இது, சருமத்தோட இரண்டாம் லேயர் வரை போய், தோலோட நிறத்துக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த, அல்ட்ராசோனிக் மெஷின் மூலம் மசாஜ் கொடுப்போம். அடுத்து பீல் ஆஃப் மாஸ்க் அப்ளை செஞ்சு 15 நிமிஷம் கழிச்சி அதை எடுத்துட்டு, டே க்ரீம் அப்ளை செய்தாஸ ஃபேஷியல் முடிஞ்சுது. மூக்கோட ஓரத்துல மட்டுமில்லாம முகம் முழுக்கவே கருமை நீங்கி ஜொலிக்கும்” என்று சொன்ன பத்மா, ”பொதுவா எல்லா பேஷியல்களுக்கும், முதல் ஸ்டெப்பாக ப்ளீச் செய்யணும். ஃபேஷியல் முடிஞ்ச பிறகு ப்ளீச் கூடவே கூடாது. ஸ்கின் லைட்டனிங் பேஷியலுக்கு, ஆரம்பத்துலயும் சரி, முடிவுலயும் சரிஸ ப்ளீச் செய்யவே கூடாது” என்று எச்சரிக்கையாகச் சொன்னார்.
மேக்கப் மூலமாக மூக்கின் அமைப்பை சரிசெய்துகொள்வதற்கு ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பத்மா தரும் டிப்ஸ்ஸ
‘சப்பை மூக்கு: மூக்கின் நடுப்பகுதியில் மட்டும் நீளவாக்கில், சரும நிறத்தைவிட லைட்டான நிறத்தில் காம்பேக்ட் பவுடரும், மற்ற இரு பக்கங்களிலும் சரும நிறத்தைவிட டார்க்கான நிறத்தில் பவுடரும் போட்டால் மூக்கு எடுப்பாக தெரியும்.
கூர்மையான மூக்கு: இரு பக்கங்களிலும் லைட் கலரிலும், நடுப்பகுதியில் மட்டும் டார்க் கலரிலும் பவுடர் போட்டால் மூக்கின் கூர்மை சற்று மட்டுப்படும்.
கோணல் மூக்கு: கோணலாக வளைந்துள்ள பகுதியின் உட்பக்கம், அதாவது வளைந்துள்ள உட்பகுதியில் லைட் கலரும், வளைவின் மேல் பகுதியில் டார்க் கலரும் கொடுத்தால் கோணல் தெரியாது.
நெற்றியிலிருந்து பள்ளமாக இறங்கிஇருக்கும் மூக்கு: புருவங்களுக்கு மத்தியில்இருந்து சட்டென பள்ளமாக இறங்கி ஆரம்பிக்கும் மூக்குக்கு, பள்ளமாக உள்ள பகுதியின் மேல் லைட் கலரில் பவுடர் போட்டால் மூக்கு சற்று எடுப்பாகும்.
குண்டான, அகலமான மூக்கு: மூக்கின் இருபக்கம் உள்ள மடல் போன்ற பகுதியில் மட்டும் டார்க் கலரிலும், நடுப்பகுதியில் லைட் கலரிலும் பவுடர் போட்டால் மூக்கு சற்று மெலிந்து காணப்படும்.