தயிர் ஃபேஸ் வாஷ் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்த பொருள். ஆகவே அந்த தயிரை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சரும மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
தயிர் மற்றும் தேன் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். குறிப்பாக அப்படி தடவும் போது, வட்ட முறையில் தேய்த்து 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முட்டை மற்றும் தேன் நார்மல் சருமம் உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது பாதாம் பேஸ்ட் சேர்த்து, பின் அதனை முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். Show
ஆப்பிள் மற்றும் க்ரீம் ஒரு ஆப்பிளை எடுத்து வேக வைத்து, பின் அதனை நன்கு மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் க்ரீம், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, பின் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும். Show Thumbnail
களிமண் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்ற வேண்டுமானால், களிமண்ணை பயன்படுத்த வேண்டும். அதற்கு களிமண்ணை நீர் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவினால், சருமம் பொலிவுடன் இருப்பதை நன்கு உணரலாம். – See more at: http://www.tamilnews.cc/news.php?id=62272#sthash.4Tz4ucGQ.dpuf