செக்ஸ் ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது. தொடர்ச்சியாக செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு சளி, காய்ச்சல் போன்றவை அண்டவே அண்டாதாம். செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்போது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி ஆரோக்கியமாக திகழ முடியுமாம்.
வாரம் 2 முறை உறவு வைத்துக் கொள்வோரின் உடலில் இம்யூனோகுளோபுலின் ஏ அல்லது ஐஜிஏ என்ற நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக சுரக்கிறதாம். இந்த ஐஜிஏ, நமது எச்சிலில் அதிக அளவு இருக்கிறது. எச்சில் மூலமாகத்தான் பல நோய்களும் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே செக்ஸை தொடர்ந்து கடைப்பிடித்து வருவோருக்கு எச்சிலில் ஐஜிஏ சுரப்பு அதிகமாகிறதாம். இதனால் பல நோய்கள் நமது உடலுக்குள் ஊடுறுவ முடியாமல் திரும்பிப் போய் விடுகின்றனவாம்.