முதலிரவைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு மற்றும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுமட்டுமின்றி, முதலிரவு என்றதுமே பலரும் குஷியாகவும், குதூகலத்துடனும் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம், கண்ட கண்ட படங்களைப் பார்த்தது தான். அப்படி நீங்கள் படங்களைப் பார்த்து, அந்த மாதிரியான எதிர்பார்ப்புக்களுடன் உள்ளே நுழைந்தால், பின் முட்டாளாக வேண்டியது தான்.
ஆம், பிறகென்ன திருமணம் முடிந்து வாழ்நாள் முழுவதும் தன்னுடன் வாழப்போகும் துணையுடன் முதல் இரவை செலவழிக்கும் போது, எதிர்பார்ப்புகளின்றி என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் சென்றால் அதன் சுகமே தனி தான். ஆனால் சிலர், தங்கள் முதலிரவைப் பற்றி பல கனவுகளுடன் சென்று, ஒருவேளை அப்படி நடக்காவிட்டால், மனம் தளர்ந்துவிடுவார்கள்.
அதற்காக எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது என்பதில்லை, இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உள்ளதல்லவா. கனவை கனவாக மறந்து, நடைமுறைக்கு ஏற்றவாறு மாறுங்கள். இங்கு முதலிரவின் போது கட்டாயம் எதிர்பார்க்கக்கூடாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
உடலுறவில் கலக்க வேண்டும் சற்று சிந்தியுங்கள். நான் முழுவதும் பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு இருவருமே மிகவும் களைப்புடன் இருப்பீர்கள். அப்போதுட் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று நினைக்காமல், அந்த இரவில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் சந்தோஷமாக பேசி நேரத்தைக் கழியுங்கள். வேண்டுமெனில், கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
உச்சக்கட்ட இன்பத்தை அடைய வேண்டும் எடுத்த உடனேயே தான் உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முதலில் இருவரும் தொட்டுப் பேச ஆரம்பியுங்கள். மற்றதை பின் பார்க்கலாம்.
பொய்யாக நடிக்க வேண்டும் ஒருவேளை உடலுறவில் ஈடுபட்டு உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றால் துணை ஏதேனும் தவறாக நினைப்பாரோ என்று எண்ணி, உச்சக்கட்ட இன்பத்தை அடைந்துவிட்டதாக நடிக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி நடிப்பதற்கு பதிலாக முதலில் இருவரும் சற்று ரொமான்ஸாக பேசி, புரிந்து கொள்ளுங்கள். அதன் பின் அனைத்தும் தானாகவே நடக்கும்.
செக்ஸியாக பேச வேண்டும் முதலிரவு என்பது வெறும் உடலுறவிற்கு மட்டும் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மற்றும் வாழ்க்கையைப் பற்றி பேசும் ஒரு அற்புதமான இரவு. எனவே முதலிரவின் போது கட்டாயம் செக்ஸ் டாக் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்திடுங்கள். மேலும் அப்படி ஒரு பெண்ணிடம் பேசினால், அவளுக்கு உங்கள் மீது தவறான எண்ணம் எழ கூட வாய்ப்புள்ளது. எனவே முதலில் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கப் போகும் துணையின் மனநிலையைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
ஆண்கள் தான் ஆரம்பிக்க வேண்டும் மற்றொரு முட்டாள்தனமான நினைப்பு, ஆண்கள் தான் எதையும் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பது. அப்படி எந்த ஒரு விதிமுறையும் இல்லை. உங்கள் காதலை துணையிடம் வெளிப்படையாக பேசி பகிர்ந்து கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.