Home இரகசியகேள்வி-பதில் 26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

79

Captureஎன் வயது 50; திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது என் மனைவிக்கு,
10 சவரன் நகைபோட்டனர். பின், நகையை விற்று, 3 சென்ட் இடம் வாங்கி, அதில் வீட்டை கட்டினோம். அந்த வீட்டை, என் மனைவியின் பெயருக்கு எழுதி வைத்தான், மைத்துனன். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவி ல்லை. எங்களுக்கு, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். என் மனைவிக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை சிறிதும் கிடையாது. சிறுபிரச்னை வந்தாலும், ‘இது, என் வீடு; நீ வீட்டை விட்டு வெளியே போ…’ என்று தான் முதலில் கூறுவாள்; என் பிள்ளைக ளுக்காக பொறுத்துக் கொள்வேன்.
சீட்டு நடத்தியும், பணம் வட்டிக்கு விட்டும் வரவு – செலவு செய்துவந்தாள், என்மனைவி. சீட்டு எடுத்த வர் பணம் கட்டாமல், ஊரை காலி செய்து விட்டதா ல், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஆனது. அதன் காரணமா க, எப்போதும் டென்ஷனாகவே இருந்தாள். எங்களிடம் அன்பாக பேச மாட்டாள். பின் எங்கள் பகுதியில் பால்கடை நடத்தும் வாய்ப்பு கிடைத்த து. ‘அதை நாம் நடத்தி, கடனை அடைத்து விடலாம்…’ என நினைத்து, மறுபடியும் கடன்வாங்கி, என்மகனை வைத்து கடை யை நடத்தினாள்.
சில மாதங்கள் நன்றாக நடந்த நிலையில், என் மகனி ன் தீய பழக்கத்தால், கடையில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், ‘நீ வீட்டை விட்டு வெளியே போ; நான் வேறு ஒரு ஆளை போட்டு கடையை நடத்திக்கிறேன்…’ என்று கூற, வீட்டை விட்டு சென்று விட்டான், மகன்.

வேறு ஒருநபரை நம்பி, கடையை நடத்தினாள். அவனோ 30ஆயிரம் ரூபாயை திருடிச்சென்று விட்டான்; மறுபடியும் நஷ்டம். என்பணம் 30ஆயிரம் ரூபாயை அவளிடம் கொடுத் து வைத்திருந்தேன். ‘அப்பணம் என்னவாயிற்று..’ என கேட் டதற்கு, ‘பணம்கொடுக்க முடியாது.’ எனசண்டை போட்டதுடன், அவள் தம்பி யை அழைத்துவந்து, இரவில் தூங்கிக்கொண்டிருந்த என்னை அடி த்து, மகளிர் காவல்நிலையத்தில் என்மீது பொய் புகார் கொடுத்து என்னையும், வீட்டை விட்டு துரத்தினாள்.
இந்நிலையில், வீட்டை விட்டு சென்ற என் மகன், தற்கொலை செய்து கொ ண்டான். மகனின் இறுதி சடங்கிற்கு சென்றேன். 15 நாட்கள் அமைதியாக இருந்தவள், மீண்டும் என் னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாள். தற்போது, நான் தனியாக வசிக்கிறேன். நம்பிக்கை துரோகம் செய்த இவளை, சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று, என் வயதிற்கு ஏற்ற துணை யை தேடிக்கொள்ளலாமா இல்லை தனியாகவே வாழ்ந்து விடலாமா?
என் குழப்பமான மனதுக்கு, தெளிவான முடிவை தருவீர்கள் என, எதிர் பார்க்கிறேன்.
— இப்படிக்கு,
தங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரனுக்கு,
நீங்கள் என்ன பணிசெய்கிறீர்கள், மாதசம்பளம் என்ன, உங்களுக்கு குடிப் பழக்கம் உண்டா, உங்கள் மகள் படிக்கிறாளா, வேலைக்கு செல்கிறாளா அல்லது திருமணம் செய்துகொடுத்து விட்டீர் களா என்பது போன்ற விவரங்கள் உங்கள் கடிதத்தில் இல்லை.
நீங்கள் நல்லதொரு கணவனாக இருந்து, மனைவிக்கு பொ ருளாதார பாதுகாப்புஉணர்வை ஏற்படுத்தவில்லை. எந்நேர த்திலும் மூழ்கி விடும் நிலையில் இருக்கும் கப்பல் போல, உங்கள் வீடு இருந்துள்ளது. குடும்பத்தை நடத்த, நிதிசுமையை குறைக்க, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளாள், உங்கள் மனைவி. ஆனால் தொழில்களில் அனுபவமின்மை மற்றும் நேர் மையான உதவியாளர்கள் இல்லாத காரணத்தால், நஷ்டப்பட்டுள்ளாள். நீங்கள் மனைவியை அமைதியா ன முறையில் எச்சரித்து, இத்தொழில்களில் ஈடுபடுவ தை தடுத்திருக்கலாம் அல்லது மனைவிக்கு உறுது ணையாக இருந்து, தொழிலை திறமையுடன் நடத்தி லாபம் ஈட்டி கொடுத் திருக்கலாம்.

பொதுவாக பெண்கள் சுயநலமாய், பேராசையாய் செயல்படுவது அவர்களின் இருப்பு கேள்விக்குறி ஆகும் போதுதான்!
தொழில்களில் மனைவி நஷ்டமடைவது பார்த்து, ரகசியமாக சந்தோஷப் பட்டுள்ளீர்கள். நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யும்போது, தன்னை தற் காத்துக்கொள்ள ‘இது என்வீடு, நீ வீட்டைவிட்டு வெளி யேபோ.’ என கூறியுள்ளாள், உங்கள் மனைவி. சாதார ண பெண்ணாக இருந்த உங்கள் மனைவி, 26 ஆண்டுக ள் திருமணவாழ்க்கையில் வில்லியாக மாறியுள்ளாள்
உங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டது, மிக வும் வேதனைக்குரிய விஷயம்தான் என்றாலும், அவனை தற்கொலைக்கு தள்ளியதில், உங்கள் இருவருக்கும் சமபங்குள்ளது. உங்களிருவரின் பொறுப்பற்ற தாம்பத்யத்தை பார்த்து, தீயவனாய் வளர்ந் துள்ளான், உங்கள் மகன். உங்கள் மனைவி, மகனை வெளியே துரத்தும்போது, குறுக்கே சென்று, நீங்கள் தடு த்திருக்க வேண்டும் அல்லது வீட்டை விட்டு விரட்டப் பட்டவனை, உங்கள் பாதுகாப்பில் வைத்து, பராமரித் திருக்க வேண்டும்.
உங்கள் கடித வரிகளை யூகித்து பார்த்தால், நீங்கள் வெற்றிகரமான கணவனோ பொறுப்பான தந்தையோ இல்லை. பரஸ்ப ரம் இருவரும் விவாகரத்து செய்துகொள்வது நலம். இனி , அவள்வழி அவளுக்கு; உங்கள்வழி உங்களுக்கு! 26 ஆண்டுகளாக கண வன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறு மண ஆசை வரலாமா?
மகளுக்கு திருமணமாகாமல் இருந்தால், தகுந்த வரன் பார் த்து, கட்டி வையுங்கள். மகளுக்கு ஏற்கனவே திருமணமா கி இருந்தால், அவளுக்கு அனுசரணையாக, ஒத்தாசையாக இருங்கள்.

மனசாந்தி பெற, கோவில்களுக்கு செல்லுங்கள். 50 வயதுக் கு பின், ஆன் மிகமே சரியான தேர்வு. பிறரை குறை கூறும் குணத்தை, ஆன்மிகம் அறவே அகற்றி விடும்!