Home பாலியல் திருமணம் ஆன புதிதில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்

திருமணம் ஆன புதிதில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்

438

New wedding couple feeling:திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.

குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.