Home சூடான செய்திகள் இந்த பிரா எப்பவும் புதுசு மாதிரியே இருக்கணுமா?…

இந்த பிரா எப்பவும் புதுசு மாதிரியே இருக்கணுமா?…

40

மனதுக்கு நெருக்கமான உள்ளாடைகளை எவ்வளவு பார்த்து பார்த்து வாங்கினாலும் மிக வேகமாகவே அது பாழாகிவிடுகிறது என்ற கவலை எல்லாப் பெண்களுக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பெண்களுக்கு பிரா என்பது இன்னொரு தோழமை போன்றது.

அவர்களின் மனதுக்கு எவ்வாளவு நெருக்கமானது என வார்த்தைகளில் விளக்கிட முடியாது. அப்படியிருக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்கும் பிராக்கள் கூட மிக வேகமாக அதன் பாழாகிவிட்டால் மனது வருத்தப்படத்தான் செய்யும். இனி உங்களுக்கு அந்த கவலையெல்லாம் வேண்டாம். வாங்கியது போலவே புதிதாக, நீண்ட நாட்களுக்கு இருக்கும்படி பராமரிக்க சில வழிகள் உண்டு.

அணியும் முறை

பெண்களிடம் பிரா அணிவதற்கென தனியாக எந்த முறையும் கிடையாது. மனதுக்குத் தோன்றியவாறு, அவசரகதியில் எப்படியாவது அணிந்து கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறான பழக்கம். பிரா அணிவதற்கென ஒரு முறை இருக்கிறது.

முதலில் கைகளை உள்ளே நுழைத்து, மார்புப் பகுதியில் பிராவின் கப்பை சரியாகப் பொருத்தி, பின்னர் பிக்புறம் கொக்கியைப் போட வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் கொக்கி அணிந்த பிறகு தோள்பட்டையை சரி செய்து கொண்டு, பின்புறமும் முன்புறமும் இடுப்பில் பொருந்தியிருக்கும் ஸ்டிராப்பை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி சரிசெய்வது அவசியம்.

இப்படி சரியான முறையில் பிரா அணியும்போது, அது அதிக நாட்கள் வரை ஸ்டிராப் லூசாக ஆகாமல் இருக்கும்.

கண்ணாடி முன் நின்று பிரா அணிந்தபின் சரியாக அணிந்திருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிராவுக்குள் பொருந்தாமல் வெளியில் சதைப்பகுதி எங்காவது வெளியில் தெரிந்தால் அது உங்களுக்குப் பொருந்தாத சைஸ் என்று தெரிந்து கொண்டுவிட முடியும்.

வெள்ளை நிற பிராக்களை லைட் கலர் ஆடைகளை அணியும்போது மட்டும் பயன்படுத்துங்கள். டார்க் கலரில் இருக்கும் ஆடைகளுக்கு உள்ளே வெள்ளைநிற பிராக்களை அணியும்போது, அதிலுள்ள கலர் உங்கள் வெள்ளை நிற பிராக்களை பாழாக்கிவிடும்.

பிராக்களை துவைக்கும்போது கொஞசம் கவனமாக துவைக்க வேண்டும். உங்களுடைய ஜீன்ஸ் மற்றும் பிற உடைகளோடு சேர்த்து தவைப்பதைத் தவிர்த்திடுங்கள். பிரா என்பது சிறிய உடையாக இருந்தாலும் அதை கொஞ்சம் அதிக ஆற்றலைக் கொடுத்து துவைக்க வேண்டும்.

பிற ஆடைகளுக்குப் பயன்படுத்தும் அதே டிடர்ஜெணஸட்களையே உள்ளாடைகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். கெமிக்கல் குறைவாக கொண்ட மென்மையான சோப்புகளையோ லிக்விடுகளையோ பயன்படுத்துங்கள்.

உலர வைக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். பிராக்களை டிரையரில் போட்டு உலர வைக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள். கிடைமட்டமான பகுதியில், பின்புறம் உள்ள கொக்கிகளை போட்டு, நீங்கள் எப்படி அணிவீர்களோ அதே வடிவ அமைப்பில் வைத்து உலர்த்த வேண்டும்.

துவைத்து முடித்ததும் பொறுப்பாக மடித்து வைக்கும் பழக்கம் பெண்களுக்கு உண்டு. பிரா விஷயத்தில் உங்கள் பொறுப்பெல்லாம் செல்லாது. பிராவை உலர்த்தி அப்படியே எடுத்து ஷெல்ப்களில் போட்டு வையுங்கள். பிராக்களை ஒருபோதும் மடித்து வைத்திருக்கக் கூடாது.