Home சூடான செய்திகள் நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்!

நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்!

65

இன்றைய காலத்தில் திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் ஓர் பிரச்சனை, படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க முடிவதில்லை என்பது. அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால், விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை எடுத்துக் கொண்டால், விரைவில் யோனியில் வறட்சி ஏற்படும். இவை அனைத்திற்கும் காரணம், தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்கள் தான்.

மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முறையாக கிடைக்காமல், உடலில் ஏற்கனவே இருக்கும் சத்துக்களும் நீங்கி, உடல் ஆரோக்கியம் விரைவில் பாழாவதோடு, பாலியல் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை உண்டாக்கி, குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும். உங்களுக்கு படுக்கையில் நீண்ட நேரம் குதூகலாமாக இருக்கவும், பாலியல் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும் உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாதுளை மாதுளையில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி நல்ல அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவும். குறிப்பாக ஆண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். எனவே பாலியல் வாழ்க்கை சிறக்க தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பூசணி விதைகள் பூசணிக்காய் வாங்கினால், அதில் உள்ள விதைகளைத் தூக்கி எறியாமல் நன்கு வெயிலில் உலர்த்தி, வறுத்து அன்றாட உணவில் தூவி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், ஸ்நாக்ஸ் போன்று ஒரு பௌலில் போட்டு சாப்பிடுங்கள். பூசணி விதைகளில் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை அதிகரிக்கத் தேவையான ஜிங்க் சத்து வளமான அளவில் உள்ளது. ஜிங்க் சத்தானது, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதோடு பூசணி விதைகளில் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் ஏ போன்றவையும் ஏராளமான அளவில் உள்ளது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புற்றுநோய் எதிர்ப்பு, சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இத்தகைய சர்க்கரை வள்ளிக் கிழங்கு பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ, பெண் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஏ சத்து, ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பைன் நட்ஸ் பைன் நட்ஸில் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த சிறிய நட்ஸை ஒருவர் அன்றாடம் சிறிது சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகளவிலான பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆண்களின் பாலியல் வாழ்வை சிறப்பாக்க உதவும். முக்கியமாக இதில் உள்ள போரான் என்னும் கனிமச்சத்து, டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

புரூஸல்ஸ் புரூஸல்ஸ் சற்று கசப்பாகவும், சற்று துர்நாற்றத்துடனும் இருப்பதால், இது அனைவருக்குமே பிடிக்கும் என்று கூற முடியாது. ஆனால் இது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த முளைக்கட்டிய புரூஸல்ஸ் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவருக்கு தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், அது அவர்களது பாலியல் வாழ்வையும் பாதிக்கும். எனவே தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்கவும், பாலியல் வாழ்க்கை சிறக்கவும் புரூஸல்ஸை அடிக்கடி சாப்பிடுங்கள்.

ஆப்பிள் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம் தான் ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. குறிப்பாக ஆப்பிளை ஒருவர் தினந்தோறும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அது ஒருவரது பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். அதிலும் ஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட்டால் தான், ஆப்பிளில் உள்ள முழு சத்துக்களையும் கிடைக்கச் செய்யும்.

கேல் கேல் கீரைகளில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 சத்தும் அதிகம் உள்ளது. வைட்டமின் பி6 மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது மற்றும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அவசியமானது. இந்த வைட்டமின் சத்து ஒருவரது உடலில் குறைந்தால், அதனால் பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கிவி கிவி பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில் கிவி பழம் இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும். ஒருவரது இதயம் மற்றும் இரத்த நாளம் ஆரோக்கியமாக இருந்தால் தான், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எனவே பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கவும், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படவும் தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிடுங்கள்.

கிரான்பெர்ரி கிரான்பெர்ரி பழம் இனிப்பு கலந்த கசப்பு சுவையுடன் இருப்பதால், இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கும். ஆனால் இந்த சிறிய பழத்தை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியம் மேம்படும். ஒருவருக்கு சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருந்தால், அது பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகவே இந்த பழத்தை கிடைக்கும் போது தவறாமல் சாப்பிடுங்கள்.

வால்நட்ஸ் நட்ஸ்களில் ஒன்றான வால்நட்ஸ் பாலியல் வாழ்வை சிறப்பாக்க உதவும். இதில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒருவர் அதிகளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது மனநிலையை மேம்படுத்தி, செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

தர்பூசணி தர்பூசணியில் தக்காளியை விட அதிகளவில் லைகோபைன் உள்ளது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தர்பூசணி ஒரு நேச்சுரல் வயாகரா. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை சிறப்பாகவும், குதூகலமாகவும் இருக்கும்.

வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தால் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்க உதவும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அது அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை தடை செய்து, பாலியல் பிரச்சனைகளை சந்திக்கச் செய்யும். ஆனால் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது சோடியத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி, பாலியல் வாழ்க்கையை சிறக்கச் செய்யும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த உருளைக்கிழங்கை உணவில் ஒருவர் தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே நீங்கள் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க விரும்பினால், உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்