முகம் பளிச்செனவும் பளபளப்பாகவும் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து மட்டும் கருப்பாக தடித்துப் போய், அருவருப்படையச் செய்துவிடும். எவ்வளவு தான் கிரீம், சோப்பு என போட்டாலும் போக மறுக்கும் கழுத்து கருமைக்கு வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்.
எடை அதிகரித்தாலும் கழுத்தில் கருமை உண்டாகும். ஆனால் வீட்டிலேயே சில பேக்குகள் போடுவதால் கருமையை எளிமையாகப் போக்கிவிட முடியும்.
வெள்ளரிக்காய் சாறினை பயன்படுத்துவதால் கழுத்துக் கருமை குறைவதோடு, சருமம் மென்மையாகவும் மாறுகிறது.
வெள்ளரிக்காயை பேஸ்ட்டாகவோ ஜூஸாகவோ கழுத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது உங்களுக்கு மிக விரைவிலேயே நல்ல தீர்வைத் தரும். நன்கு கழுவிய பின் ரோஸ் வாட்டரை கழுத்தில் அப்ளை செய்து கொண்டால் சருமம் மிருதுவாகும்.
உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, கழுத்தில் நன்கு தேய்க்கலாம். அப்படி தேய்ப்பது சிரமமாக இருந்தால், உருளைக்கிழங்கு ஜூஸை எடுத்து கழுத்தில் தேய்த்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
எலுமிச்சை ஜூஸையும் ரோஸ் வாட்டரையும் சம அளவு எடுத்துக் கலந்து கழுத்தில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் சுத்தம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கி, நார்மல் நிறத்துக்கு வந்துவிடும்.
கற்றாழையை பேஸ்ட் செய்து கழுத்தில் தேய்த்து உலரவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவ கழுத்துக் கருமை நீங்கும். ஃபிரெஷ்ஷாக அரைத்துப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
பாதாம் ஆயிலை சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் கழுத்தில் தேய்த்து மசாஜ் செய்ய கழுத்தின் நிறம் கூடும். மேலும் அது ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
ஆரஞ்சுப் பழத்தோலை உலர வைத்து பவுடராக்கி, அதனுடன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கி, அந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி உலரவிட்டு கழுவ வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை இதை செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.