Home பெண்கள் தாய்மை நலம் இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?

18

201608081419014810_how-pregnant-in-natural-way_SECVPF* உடல் பருமன் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம்.

* காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

* மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வரவேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.