Home பெண்கள் அழகு குறிப்பு நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

38

201610241206144731_mustard-oil-to-prevent-white-hair_secvpf* வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

* கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

* பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

* கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.