Home ஜல்சா நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி!

நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி!

34

captureதமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவர் மாலதி(23) என்பவரை அண்மையில் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென்று திருப்பூரைச் சேர்ந்த வினோத் என்பவர் மாலதியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாலதியிடம் பொலிசார் விசாரணை நடத்துகையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் வேளாங்கன்னிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த டீக்கடைக்காரரான நவநீதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது நீடிப்பதற்காக மாலதி ஸ்டீபன் உடன் தகராறில் ஈடுபட்டுவிட்டு, நவநீதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். வேளாங்கன்னியில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த போது நாகையைச் சேர்ந்த ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக நவநீதனை உதறித்தள்ளிவிட்டு நாகையைச் சேர்ந்த இளைஞரிடம் ஓட்டம் பிடித்துள்ளார். இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

வினோத் மீது கொண்ட மோகத்தினால் நாகையைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றி விட்டு வினோத்தை நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய வாழ்க்கை சுமார் ஒன்றரை வருடம் அருமையாக சென்றுள்ளது. அப்போது கோவிலுக்கு செல்வதற்காக இருவரும் திருச்சி சமயபுரம் சென்றுள்ளனர்.

அப்போது வினோத் நண்பனான அசோக் இவர்களுடன் சென்றதால், அசோக்கிற்கும், மாலதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாலதி வினோத்தை விட்டு பிரிந்து அசோக் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கியுள்ளார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்கிற்கும் மாலதிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது குறித்த தகவலை எப்படியோ அறிந்த வினோத் அசோக்கிடம் சென்று மாலதியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு தான் அவர்கள் பொலிசில் புகார் செய்துள்ளனர். மேலும் பொலிசார் மாலதியின் மற்ற 3 கணவர்களிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை செய்துள்ளனர். இறுதியாக கணவன்கள் வினோத்தும் அசோக்கும் மாலதியை ஏற்று கொள்ளாததால் மாலதி சொந்த ஊருக்கு போவதாக கூறியுள்ளார். இதையடுத்து மாலதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.