Home சமையல் குறிப்புகள் நாவிற்கு விருந்து! நண்டு மிளகு வறுவல்!

நாவிற்கு விருந்து! நண்டு மிளகு வறுவல்!

30

காரசாரமான நண்டு மிளகு வறுவலை எப்படி வைப்பது என்று பார்ப்போம்!

தேவையான பொருட்கள்

நண்டு -1 கிலோ
முழு மிளகு – 3 டீஸ்பூன்
தனியாதூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 கப் ( அரைக்கவும்)
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை

வெறும் கடாயில் மிளகு, சோம்பு, கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்கவும்.

அதனுடன், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்கி விட்டு அரைத்த மசாலா தூள், மஞ்சள்தூள், சுத்தம் செய்த நண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடாக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.

அவித்த மிளகு, நண்டை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

காரசாரமான நண்டு மிளகு வறுவல் ரெடி!