மிக எளிய முறையில் செய்யக்கூடிய நண்டு வறுவல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு – 2
எண்ணெய் – 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1/2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
தக்காளி – 1/2 கப் ( நறுக்கியது)
தனியாதூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 5
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1/2 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து 2 கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு இட்டு கொதிக்க வைத்து நண்டு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
நண்டு வெந்த பின் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு லேசான பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
அடுத்ததாக, நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், தனியாதூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், வேக வைத்த நண்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். நண்டு மசாலாவுடன் நன்கு கலந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு 5 நிமிடம் கடாயை மூடி வைத்து அடுப்பை அணைக்கவும்.
நண்டு வறுவல் ரெடி!