தேவையான பொருட்கள் :
நண்டு – அரை கிலோ
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 3 (நடுத்தரஅளவு)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/2தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலாதூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
சோம்பு – தாளிக்க
அரைக்க :
தேங்காய் துருவல் – 1/2 கப்
கசகசா – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை :
* நண்டினை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
* அடுத்து தேஙகாய் துருவல், கசகசா, சோம்பு, மிளகு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதிலுள்ள எண்ணெய் முழுவதும் வெளியேறும் வரை வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பின்பு சுத்தம் செய்த நண்டை சேர்த்து நன்றாக கிளறவும். நண்டில் தண்ணீர் இருக்கும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான நண்டு குழம்பு ரெடி.