இளம் வயதில் மகன் கொண்டுள்ள ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம். அவ்வகையில் ஒரு இளம் ஆண் பிள்ளை கொண்டுள்ள ஒரு விதவை தாயின் வாழ்வில் தாம்பத்தியம் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு உண்மை பதிவு. அப்பெண் கூறியவாறே…
அஸாம்! “நான் 40 வயது மிக்க ஒரு விதவை பெண். எனக்கு 20 வயதில் ஒரு ஆண் மகன் இருக்கிறான். நாங்கள் அஸாமில் ஒரு சிறிய டவுன் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எனக்கும் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கிறது. இதை பலரால் ஜீரணிக்க முடியாது.”
கொடுமையான குழந்தை பருவம்! “தாயற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த நான்காவது பெண் நான். இது ஒரு சாதாரண வாழ்க்கை அல்ல. குழந்தை பருவத்தில் நிறைய கொடுமைகளை அனுபவித்துள்ளேன். என் இளைய சகோதரனுக்கு மட்டுமே அனைத்து அக்கறையும், காதலும் கிடைத்தது. பெண்கள் நாங்கள் எப்போதும் தவிர்க்கப்பட்டோம். தந்தையால் மட்டுமல்ல, உறவினர்களாலும் கூட.”
பருவ வயது! “கொடுமைகள் மட்டுமே கண்ட, கடந்துவந்த நான், ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என பத்து வயதில் எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன். அப்போது ஒரு நல்ல தாய் என்றால் என்ன, எது என எனக்கு தெரியாது.” “என் தோழிகள், நண்பர்களை போல நான் எனது பருவ வயதை பெரிதாக அனுபவிக்கவில்லை. ஓவியம் வரைவதிலேயே என் காதல் நிறைந்திருந்தது. எனது எதிர்காலம் ஓவியம் சார்ந்தே இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், என் தந்தையை எதிர்த்து என்னால் எனது கனவை தொடர முடியவில்லை. என் அவர் எனது சகோதரனின் எதிர்காலத்தை பிரகாசமாக்க மட்டுமே எண்ணியிருந்தார். பெரும்பாலான சேமிப்பை அவனது எதிர்காலத்திற்கு ஒதுக்கினார். இதனாலே எனது ஓவிய கனவுகளுக்கான விஷயங்களை நான் அவரிடம் கேட்க முடியவில்லை.”
மனதளவில் உடைந்து போனேன்! “மிக விரைவாக திருமணம், போதைக்கு அடிமையான கணவன், உடனே குழந்தை, முடிக்கப்படாத படிப்பு என பல விஷயங்கள் என்னை மனதளவில் உடைந்து போக செய்தது. இதற்கு இடையிலும் நான் எனக்கு நானே செய்துக் கொண்ட சத்தியத்தை மறக்கவில்லை. என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் விவாகரத்தும் செய்ய முடியாமல் போனது. இங்கு தான் நான் உண்மையான போராட்டத்தை உணர்ந்தேன்.
விதவை கோலம்! “விவாகரத்து செய்ய முடியாது என்ற போதிலும். ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்தேன். எனக்கான உணவை நானே உழைத்து வாங்கினேன். லீகல் திருமண உறவில் இருப்பதால், மீண்டும் ஒரு திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்ற நிலை. கடைசியில் ஒரு நாள் எனது பொறுப்பற்ற கணவர் உயிரிழந்து என்னை விதவை ஆக்கினார்.”
சமூகத்தின் பார்வை! “இந்த சமூகம் எனக்கு அளிக்கும் முகவரி சீட்டை என்னால் மறுக்க முடியாது என்ற போதிலும். நான் எனது வாழ்வை இலகுவாக வாழ ஆரம்பித்தேன். இனிமேல், 18 வயது பெண்ணாக உரிமைகள் பறிக்கப்பட்டு சுதந்திரமாக இல்லாமல் இருந்த பெண்ணாக இன்றி, நான் என் உரிமைகளை சுதந்திரமான சிந்தனையோடு வாழலாம் என்ற தைரியம் பிறந்தது.”
இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது? “ஒரு விதவையாக இந்த சமூகம் என்னை எப்படி வாழ சொல்கிறது? உடலுறவு இன்றி! 18 வயதாக இருந்தாலும், 50 வயதாக இருந்தாலும் ஒரு பெண் விதவை என்றால் உடலுறவு இல்லாமல் தான் வாழ வேண்டும் என்பது தான் நமது சமூகத்தின் சட்டம். பல காரணங்களால் நாம் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதில் பெரிய காரணம் எனது மகனுக்காக. இந்திய சமூகம் ஒரு விதவை பெண் உடலுறவில் ஈடுபட கூடாது என்று தான் கூறுகிறது. ஆனால், எனக்கு புரியவில்லை, ஏன் நான் ஒரு ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது?” “ஒரு ஆணுக்கு செக்ஸ் தேவை என்பது பொதுவாக இருக்கும் போது. பெண்ணுக்கு ஏன் அது வேறு மாதிரியான பார்வையில் பார்க்கப்படுகிறது. இதை பற்றி பல விவாதங்கள் சமூகத்தில் வெளிப்படையாக வர வேண்டும். ஒரு நல்ல தாயாக என் மகனை நான் வளர்க்காவிட்டால் இச்சமூகம் என்னை கேள்விக் கேட்கலாம். என் படுக்கையறையை எட்டிப்பார்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.” இது இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் நேர்ந்த நிலை அல்ல. நமது சமூகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு பெண் மனதுக்குள் அடக்கி வைத்துக் கண்டிருக்கும் ஒரு விஷயம் தான் இது.
அன்று முதல் இன்று வரை! பண்டைய காலத்தில் இருந்தே நமது சமூகத்தில் இயற்றப்பட்ட வாழ்வியல் விதிகள் ஆண்களை சார்ந்தும், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துமே காணப்படுகிறது. பழக்கவழக்கத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்பதில் துவங்கி. இன்றளவும் துணை இழந்த பிறகு, விவாகரத்து செய்த பிறகு ஒரு ஆண் மறுமணம் செய்வதில், ஒரு பெண் மறுமணம் செய்வதில் ஏகப்பட்ட மாற்று பார்வைகள், வேற்று சிந்தனைகள், சமநிலையற்ற விவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.