‘நெய்ல் ஆர்ட்’ எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.
பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டு அழகுபடுத்துவது பேஷனா இருந்துச்சு. அதுலயும் பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்… என மாறியது.
இன்றைய பெண்கள் பார்ட்டி, திருமண விழாக்கள், ஹாலிடே ஷாப்பிங் என சூழலுக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டில் பின்னியெடுக்கின்றனர்.
வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம். அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கோண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷ் டிசைன் போடுவது ஒருவகை நெயில் ஆர்ட்.
மிக நுணுக்கமான டிசைனைப் போட ஸ்டாம்பிங் நெயில் ஆர்ட்டும் இருக்கிறது. பூக்கள் புள்ளிகள் ஜியாமெட்ரிக் டிசைன்கள் அவரவர் ராசிகள் என தீம் டிசைன்கள் போடுகிறார்கள். ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில், ஸ்டாம்ப் பண்ணினால் மிக அழகாக இருக்கும்! தவிர ரெடிமேடாக நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி அதிலிருக்கும் க்ளு வைத்தே நம் நகங்களில் ஒட்டிக்கொள்ளலாம்.
சாதாரண நெயில் பாலிஷில் நெயில் ஆர்ட் நன்றாக வராது. அழுத்தமாக நிற்கவும் நிற்காது. இதற்கென ஸ்பெஷல் நெயில் பாலிஷ் விற்கிறது.