பொது மருத்துவம்:நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.
உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான் நகமாக வளர்கிறது.
மேலும் இத்தகைய நகங்களின் அமைப்பை வைத்து நம் உடல் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளவது எப்படி என பார்ப்போம்.
மெல்லிய நகங்கள்
நகங்கள் பார்ப்பதற்கு மிகவும் மென்மையாக இருந்தால் இதற்கு காரணம் உடலில் மிகவும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.
மங்கிய நிற நகங்கள்
நகங்கள் மங்கிய நிறத்தில் இருந்தால் அவை இரத்த சோகை, இதய நோய்கள், ஊட்டசத்து குறைபாடு, கல்லீரல் கோளாறு போன்ற மோசமான பிரச்சினை ஏற்படுத்தும்.
நீல நிற நகங்கள்
இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். மேலும் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
கருப்பு கோடு விழுந்த நகங்கள்
நகங்களின் மீது கருப்பு நிறத்தில் கோடுகளாக விழுந்திருந்தால் அவை தோல் புற்றுநோய் இருப்பதை குறிக்கிறது.மேலும் தோல் புற்றுநோய் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
வெள்ளை நகங்கள்
நகம் பார்ப்பதற்கு வெள்ளையாகவும் கடினமாகவும் இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை என்று அர்த்தம். அத்துடன் உங்களின் கல்லீரல் சீராக வேலை செய்யவில்லை எனவும் கூறலாம்.
மஞ்சள் நிற நகங்கள்
நகங்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய், நுரையீரல் கோளாறு, தைராய்டு பிரச்சினை போன்றவை இருக்கும்.
உடைந்த நகங்கள்
நகங்கள் அடிக்கடி உடைகிறது என்றால் அதற்கு தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததே காரணமாக இருக்கும். அத்துடன் தொற்றுகளின் பாதிப்பாகவும் இருக்கும்.
வீங்கிய நகங்கள்
சிலரது நகங்கள் பார்ப்பதற்கு வீங்கியது போன்று இருக்கும். மேலும் நகங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் அதற்கு சீரான ரத்த ஓட்டம் உடலில் இல்லையென்று அர்த்தம்.
சிவந்த சொறிப்பு போன்ற நகங்கள்
நகங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக சிவந்து சொறி ஏற்பட்டது போன்று இருந்தால் அவர்கள் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
செய்யவேண்டியவை
நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.
பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.