நாட்டுக்கோழி கறி – 1 கிலோ,
வெங்காயம் – 4,
தக்காளி – 2 சிறியது,
பூண்டு – 15 பல்,
இஞ்சி – 2 அங்குல துண்டு.
தாளிக்க :
ந.எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பட்டை – 2 துண்டு,
சோம்பு – 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் – 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
தனியா – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 15,
மிளகு – 30 கிராம்,
சோம்பு – 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.
* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.
* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.