பிரித்தானிய பெண்ணொருவர், நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த 39 வயதான சுஸி கெய்ர்ன்ஸ் எனும் இப்பெண் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் அக்காட்சியை வீடியோவில் பதிவு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, கடந்த மார்ச் மாதம் சுஸி கெய்ன்ஸின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மேற்படி வீடியோவும் ஆபாசமான சுமார் 160 புகைப்படங்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது மேற்படி குற்றச்சாட்டுகளை சுசான் கெய்ன் ஒப்புக்கொண்டார்.
அவர் எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஸி கெய்ன்ஸின் பின்னணி குறித்த சமூக சேவகர்களின் அறிக்கை ஆராயப்படும் வரை அவருக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.