Home இரகசியகேள்வி-பதில் என் கணவர் உறவின்போது சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை?

என் கணவர் உறவின்போது சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை?

233

கேள்வி: எனக்கு வயது 25. எனக்கு குழந்தை பிறந்த பின் போடப்பட்ட தையல் சரியான பராமரிப்பின்மை காரண மாகப் பிரிந்துவிட்டது. எனவே, 17வது நாள் மீண்டும் தைப்ப தற்காக மரப்பு ஊசி போட்டுத் தைத்தனர்.

பின் 7 மாதங்கள் நாம் உறவுகொள்ளவில்லை. இப்போது என் பிறப்புறுப்பின் உட்பகுதியில் எந்தவித உணர்வும் இல்லை. கிள்ளினால்கூட வலி தெரியவில்லை.

இதனால் என் கண வரோடு உறவுகொள்ளும்போது உட்பகுதியில் எந்த உணர்வும் தெரியவில்லை. இது ஏதும் பிரச்சினையா?

பதில்: அடிக்கடி நாம் குறிப்பிடும் விடயம் இதுதான். இதுபோன்ற மருத்துவம் சார்ந்த, அவசரமாக மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகின்ற விடயங்களை எமக்குக் கடிதம் எழுதித் தெரிந்துகொள்ளும் வரை காத்திருக்க வேண்டாம்.

வாரந்தோறும் வரும் பல நூற்றுக் கடிதங்களில் இதுபோன்ற உடனடி மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகின்ற கடிதங்கள் விட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் பிரச்சினையை உடனடியாக நீங்கள் தையல் போட்டுக்கொண்ட வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுங்கள்.

அவர்களது ஆலோசனைப் படி நடந்துகொள்ளுங்கள். கால தாமதம் செய்யா தீர்கள்.

——————————-
கேள்வி: எனக்கு வயது 22. என் கணவருக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. நாம் உறவில் இணையும்போது என் கணவர் முன்விளையாட்டுக்களைத் தவிர்த்துவிட்டு உடனே இணைகிறார்.

அவர் உச்சம் தொட்டதும், என் தேவைகள் பற்றி சிந்திக்காமல் உடனே விட்டு விலகிவிடுகிறார். அவரைத் திருப்திப்படுத்தவே விருப்ப மில்லாமலேயே அவருடைய ஆசைக்கு இணங்குகிறேன். முன் பெல்லாம் இப்படியில்லை. இப்போது இப்படி நடந்துகொள் வதற்குக் காரணம் நான் இன்னும் கருவுறாமையா? என் மேல் அவருக்கிருந்த ஆசை குறைந்துவிட்டதா?

பதில்: வருத்தமான விடயம்தான்! ஒரு பெண்ணின் விருப்பத்தை அறியாமலேயே அதுவும் முன்விளை யாட்டுக்களைத் தவிர்த்து உறவில் ஈடுபடுவது, உடல் ரீதி யாகவும் உள ரீதியாகவும் அந்தப் பெண்ணுக்கு எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

திருமணமானது முதலே உஙகள் கணவர் இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அதை வேறு விதமாகப் பார்க்கலாம்.

ஆனால், ஒரு வருடத்தின் பின் இப்படி நடந்துகொள்வதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போலவே குழந்தைப் பேறு கிட்டாததே பிரச்சினையாகவும் இருக்கலாம்.

தாம்பத்தியம் தவிர உங்கள் இருவருக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று தெரியவில்லை.

ஒருவேளை உங்களுடன் நன்கு சிரித்துப் பேசியோ அல்லது உங்கள் மீது அக்கறை செலுத்துபவராகவோ இருந்தால், இந்தப் பிரச் சினையை மென்மையான முறையில் அவரிடமேயே கேட்டுப் பார்க்கலாம்.

ஒருவேளை தன்னைப் பாதித்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை உங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, அவரும்கூட விருப்பமில்லாமல் உங் களுக்காக உறவில் இணையவும் வாய்ப்புகள் உள்ளன.

பொதுவில், இதுபோன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரும் கதைத்துத் தெரிந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு சந்தேகங்கள் மனதுக்குள் குடிபுகுந்துவிடும்.

அப்படி நடந்துவிட்டால் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வது மிகச் சிரமமான காரியம்.

எனவே, உங்கள் கணவரிடமேயே இதுபற்றிக் கதை யுங்கள். நிச்சயம் பிரச்சினைகள் தீரும்.

————————————————-
கேள்வி: எனக்கு வயது 28. திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லை. உறவின்போது என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை.

உச்சநிலைக்குப் பின் அவர் மிகுந்த கஷ்டத்துடன் சோர்ந்துவிடுகிறார்.

உறவின்போது வெளிப்படும் சுக்கிலப்பாயம் முழுவதுமாக என் பெண்ணுறுப் புக்குள் செல்வதில்லை.

வெளியே கசிந்து விடுகின்றன. சுக்கிலப்பாயம் முழுமை யாக உள்ளே செல்லாவிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லையா?

அத்துடன், உறவின் போது எனது அடிவயிற்றில் பலமான வலியை உணர்கிறேன். எங்களிடம் ஏதும் குறைகள் இருக்குமா?

பதில்: பெரும்பாலான ஆண்கள் 3 நிமிடங்கள் வரையே தாக்குப்பிடிப்பார்கள். எனவே இதை ஒரு குறையாக எண்ணிவிடாதீர்கள்.

முன் விளையாட்டுக்களில் அதிக நேரம் ஈடுபடுவதன் மூலம் அந்த மூன்று நிமிடங்களே பெண்களை உச்ச நிலை எட்ட வைக்கப் போதுமானதாக இருக்கிறது.

நீங்கள் கூறும் விபரங்களை வைத்துப் பார்க்கையில் உங்களது பிறப்புறுப்பில் காணப்படக்கூடிய கன்னித்திரை இன்னும் அகலாமல் இருக்கலாம் எனச் சந்தேகம் தோன்றுகிறது.

இதனாலேயே வலியும் சுக்கிலப்பாயம் வெளியேறும் போக்கும் காணப்படலாம் என்றும் தோன்றுகிறது.

சுக்கிலப்பாயம் முழுமையாக உள்ளே செல்வதனால் தான் குழந்தை உருவாகிறது என்பது தவறானது.

சுக்கிலத்தில் காணப்படும் கோடிக்கணக்கான உயி ரணுக்களில் வீரியமான ஒன்று உள்ளே சென்றால்கூட கரு முட்டையைத் தேடிப்போய் சினையாகிவிடும்.

இது நிகழ்வதற்குக்கூட உங்களது கன்னித்திரை விலகவேண்டும். எனவே, தாமதிக்காமல் ஒரு பெண்ணோயியல் வைத்தியரைக் கலந்தாலோசிப்பது நல்லது.