டேட்டிங் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. முதல் சந்திப்பில் முத்தம் தொடங்கி மொத்தமும் பார்த்துவிடுவது என்ற ஆவலில் இளசுகள் தவறு செய்ய துணிகின்றனர். காதலோ, நட்போ தனியாக சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே செக்ஸ் வைத்துக்கொள்வது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஆணும் பெண்ணும் பேசிப் பழகி, தனியாக சந்திக்கலாம் என்று முடிவு செய்த முதல்நாளிலேயே அவசரப்படுவது தவறான இருவர் மீதும் அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த நாளை நன்றாக பேசி புரிந்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
இதுநாள் வரை போனிலும், இணையதளம் வாயிலாகவும் பேசியிருப்பீர்கள். இப்பொழுதுதான் முதன் முதலாக நேரில் சந்திக்கப் போகிறீர்கள் என்றால் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது கூட ஆபத்தானதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.
முதல்நாளிலேயே உடல்ரீதியான உறவு ஏற்பட்டு விட்டால் அடுத்த நடவடிக்கைகள் எல்லாமே அதைப்பற்றிய சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதனார் தேவையற்ற குற்றஉணர்வுகளுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணத்தன்று முதல்நாள் இரவில் தம்பதியர் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும், முத்தமிட்டு உறவை தொடங்கலாம். அதுவே காதலர்கள் எனில் தனியாக சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே செக்ஸ் பற்றிய பேச்சோ, செயல்பாடுகளோ இருவருக்கும் இடையேயான நன்மதிப்பை குலைத்துவிடும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.